'மாவீரன்' படத்தில் நடிக்கும் அதிதிஷங்கருக்கு சம்பளம் இத்தனை லட்சமா?

சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகிவரும் ’மாவீரன்’ திரைப்படத்தில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதிஷங்கர் தான் நாயகி என சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவர் நடித்த முதல் படமான ’விருமன்’ திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாக இருக்கும் நிலையில் அந்த படம் வெளியாவதற்கு முன்பே இரண்டாவது படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’மாவீரன்’ திரைப்படத்தில் நடிப்பதற்காக அவருக்கு சம்பளம் ரூபாய் 25 லட்சம் என்று கூறப்படுகிறது. அறிமுக நடிகை ஒருவர் நடித்த முதல் படமே இன்னும் வெளியாகாத நிலையில் இரண்டாவது படத்திற்கு ரூ.25 லட்சம் சம்பளம் என கோலிவுட் திரையுலகமே ஆச்சரியத்தில் உள்ளன.

ஷங்கரின் மகள் என்பதால் தான் இந்த பெரிய சம்பளமா? அல்லது அவரது முதல் படத்தை பார்த்து அவரது நடிப்பு, நடனம், குரல் ஆகிய திறமைக்காக தயாரிப்பாளர் இந்த பெரிய சம்பளத்தை தருகிறாரா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

தமிழ் திரையுலகில் பல ஆண்டுகளாக இருக்கும் நடிகைகளுக்கே இன்னும் 25 லட்சம் சம்பளம் இல்லாத நிலையில் முதல் படம் வெளியாகாத ஒரு நடிகைக்கு பெரிய சம்பளம் என்பது மற்ற நடிகைகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே நடிகை ஆத்மிகா, அதிதிஷங்கர் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை பதிவு செய்துள்ள மற்ற நடிகைகளின் மனதிற்குள்ளும் இதே கருத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் என்னதான் ஷங்கரின் மகள் என்ற அடையாளத்தோடு திரையுலகில் நுழைந்தாலும், அவர் தனது தனித்திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு பெற முடியும் என்றும் கோலிவுட் திரையுலகினர் கூறுகின்றனர்.