close
Choose your channels

வில்லன் நடிகருக்கு ஜோடியாக நடிக்கின்றாரா அதிதி ஷங்கர்?  பரபரப்பு தகவல்..!

Tuesday, June 25, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், வில்லன் நடிகர் ஒருவருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர், கார்த்தி நடித்த ’விருமன்’ என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகம் ஆகி அதன் பின்னர் சிவகார்த்திகேயன் நடித்த ’மாவீரன்’ படத்தில் நாயகியாக நடித்தார். அவர் நடித்த இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நாயகி ஆக நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அடுத்ததாக தமிழ் திரையுலகில் வில்லனாக அறிமுகமாகி தற்போது ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் அர்ஜுன் தாஸ் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் ஒரு மியூசிக்கல் லவ் ஸ்டோரி என்றும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்திற்கு ’ஹிருதயம்’ என்ற மலையாள படத்திற்கு இசையமைத்த ஹிஷாம் என்பவர் தான் இசையமைக்க இருப்பதாகவும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடித்த ’அநீதி’ உட்பட சில படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அதிதியுடன் அவர் நடிக்கும் படமும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment