ஒண்ட் அண்ட் ஒன்லி தலைவரை சந்தித்து ஆசி பெற்றேன்: அதிதி ஷங்கர்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், சமீபத்தில் ஹீரோயின் ஆகியுள்ள நிலையில் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து உள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் உருவாகவிருக்கும் ‘விருமன்’ என்ற திரைப்படத்தில் ஹீரோயினியாக அறிமுகமாக உள்ளார் என்பதும் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அதிதி ஷங்கர் நடிக்கும் முதல் திரைப்படத்திற்கு எஸ்எஸ் ராஜமவுலி உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் முதல் முதலாக ஹீரோயின் ஆகியுள்ள அதிதி ஷங்கர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். ரஜினியை சந்தித்தது குறித்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து, ‘விநாயகர் சதுர்த்தி தினத்தில் ஒண்ட் அண்ட் ஒன்லி தலைவரிடம் ஆசி பெற்றேன் என கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி, எந்திரன், 2.0 ஆகிய படங்களை இயக்கி உள்ள ஷங்கர், மீண்டும் ரஜினிகாந்த் படத்தை இயக்க வேண்டும் என ரசிகர்கள் தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
On the auspicious day of vinayagar Chathurthi yesterday, got to meet the one and only THALAIVAR ???????? @rajinikanth sir and got his blessings. #naadinerambumurukkamurukka #annaatthe #superstar pic.twitter.com/6hphIFXa9q
— Aditi Shankar (@AditiShankarofl) September 11, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com