இயக்குனர் ஷங்கர் மகளுக்கு கிடைத்த பெருமைக்குரிய பட்டம்: வைரல் புகைப்படங்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதிஷங்கர், ‘விருமன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் கார்த்தி ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தை முத்தையா இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் யுவன்சங்கர்ராஜா இசையமைத்து வருகிறார் என்பதும் இந்த படத்திற்கு இப்பொழுது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதிசங்கர் டாக்டர் படிப்பு படித்து முடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இதனை அடுத்து தற்போது அவருக்கு பட்டமளிப்பு விழா நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் அதிதி ஷங்கருக்கு டாக்டர் பட்டத்தை வழங்கும் புகைப்படத்தை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதே போல் டாக்டர் பட்டத்துடன் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தையும் அதிதி ஷங்கர் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘டாக்டர்’ என்ற பெருமைக்குரிய பட்டம் பெற்ற அதிதிஷங்கருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Here’s to all the fun memories, late nights and mugs of coffee that got me here ✨ Officially Dr.Aditi Shankar #graduationday #endsandbeginnings pic.twitter.com/bws6Wlcy1O
— Aditi Shankar (@AditiShankarofl) December 11, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments