நடிகை அதிதிஷங்கரின் வேற லெவல் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதிஷங்கர் கார்த்திக் நடிப்பில், முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விருமன்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார் என்பதும், இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அதிதிஷங்கர் அடுத்ததாக சிம்பு  நடிப்பில் கோகுல் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’கொரோனா குமார்’ என்ற படத்திலும் நடிக்க உள்ளதாகவும் இதுகுறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் அதிதிஷங்கர் அவ்வப்போது தனது வித்தியாசமான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் சற்று முன் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. கருப்பு காஸ்ட்யூமில் வித்தியாசமான போஸ் கொடுத்துள்ள அதிதிஷங்கரின் இந்த போட்டோ ஷூட் புகைப்படங்களுக்கு கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.