அதிதிஷங்கர் பாடிய முதல் பாடலின் வீடியோ: செம வாய்ஸ் என ரசிகர்கள் பாராட்டு!

  • IndiaGlitz, [Monday,February 07 2022]

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதிஷங்கர், கார்த்தி நடித்து முடித்துள்ள ’விருமன்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படம் இன்னும் ஒரு சில நாட்களில் ரிலீசாக இருக்கும் நிலையில் அதிதிஷங்கர் நடிகையை அடுத்து பாடகியாகவும் மாறி உள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். வருண் தேஜ் நடித்துள்ள ‘கானி’ என்ற தெலுங்கு படத்தில் அதிதிஷங்கர் பாடிய பாடலை இசையமைப்பாளர் தமன் சமீபத்தில் கம்போஸ் செய்ததாகவும், இந்த பாடலின் புரமோ இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சற்று முன்னர் இந்த பாடலின் புரோமோ வீடியோ வெளியாகி உள்ள நிலையில் அதில் அதிதிஷங்கர் செம ஆட்டம் போட்டுக் கொண்டே பாடும் காட்சிகள் உள்ளன. அவரது குரல் மிகவும் இனிமையாக இருப்பதாக ரசிகர்கள் இந்த பாடல் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

’ரோமியோ ஜூலியட்’ என்று ஆரம்பிக்கும் இந்த பாடலின் முழு வடிவம் நாளை அதாவது பிப்ரவரி 8ஆம் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். நடிகை மட்டுமின்றி பாடகியாகவும் திரையுலகில் அதிதிஷங்கர் கலக்குவார் என்பதற்கு இந்த பாடலே உதாரணமாக உள்ளது என்று திரையுலகினர் கூறி வருகின்றனர்.

More News

குடும்பத்துடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினிகாந்த்: ஐஸ்வர்யா மட்டும் மிஸ்ஸிங் ஏன்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் குடும்பத்துடன் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் அவருடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மட்டும் மிஸ் ஆனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவாஜி கணேசனின் பாசமலர் தங்கைதான் லதா மங்கேஷ்கர்… பலரும் அறியாத தகவல்!

இசைக்குயில் லதா மங்கேஷ்கரின் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும்

கடலோடு கதைப்பேசும் நடிகை காஜல் அகர்வால்… கவனம் ஈர்க்கும் புகைப்படம்!

சமீபத்தில் துபாய் சென்றுள்ள நடிகை காஜல் அகர்வால் ரம்மியமான கடற்காற்று, அழகான வெயிலுக்கு நடுவே எடுத்துக்கொண்ட

ரம்மியமான அழகில் கீர்த்தி பாண்டியன்… வைரலாகும் புகைப்படம்!

மூத்த நடிகரும் தயாரிப்பாளருமான நடிகர் அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன்

ரோஹித்துக்கு தானாக வந்து உதவிய கோலி… ரசிகர்களை நெகிழ வைத்த சம்பவம்!

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றனர்.