முழுசா விஜய் ரசிகையாக மாறிய அதிதி ஷங்கர் .. 'நா ரெடி' பாடலுக்கு செம்ம ஆட்டம்..!

  • IndiaGlitz, [Monday,September 04 2023]

நடிகை அதிதி ஷங்கர் தனது சமூக வலைதள பக்கத்தில் விஜய் நடித்த 'லியோ’ படத்தில் இடம்பெற்ற ’நா ரெடி’ என்ற பாடலுக்கு காரில் உட்கார்ந்து கொண்டு செம ஆட்டம் ஆடிய வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு லைக் கமெண்ட் குவிந்து வருகிறது.

கார்த்தி நடித்த ’விருமன்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் அதிதி ஷங்கர்.அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடித்த ’மாவீரன்’ படத்தில் நடித்த நிலையில் தற்போது அவர் அதர்வா சகோதரர் ஆகாஷ் முரளி நடிப்பில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் ’7ஜி ரெயின்போ காலனி 2’ படத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்ஸ்டாவில் ஆக்டிவ்வாக இருக்கும் அதிதி ஷங்கர் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்துள்ளார். அதில் அவர் பதிவு செய்யும் பதிவுகள் வைரலாகும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் காரில் சென்று கொண்டிருக்கும்போது விஜய் நடித்த ’லியோ’ படத்தில் இடம் பெற்ற ’நா ரெடி’ பாடலுக்கு உட்கார்ந்து கொண்டே செம ஆட்டம் ஆடி உள்ளார். இந்த வீடியோவுக்கு சுமார் 2 லட்சத்துக்கு மேல் லைக் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

சூர்யாவுக்காக மாதம் ஒருமுறை லண்டன் செல்லும் வெற்றிமாறன்.. இதுதான் காரணம்..!

சூர்யாவின் படத்திற்காக மாதம் ஒரு முறை இயக்குனர் வெற்றிமாறன் லண்டன் சென்று வருவதாக கூறப்படுகிறது.

'ஜெயிலர்' மருமகளா இவர்? வித்தியாசமான காஸ்ட்யூமில் போட்டோஷூட்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் ரூ.600 கோடி வசூலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

41 ஆண்டுகளுக்கு பின் ரீஎண்ட்ரி ஆகும் பாரதிராஜா பட நடிகர்.. ஒரே படத்தில் சினிமாவில் இருந்து விலகியவர்..!

பாரதிராஜாவின் படத்தில் நடித்து அந்த படத்தோடு சினிமாவில் இருந்து விலகியவர் தற்போது 40 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ரீஎண்ட்ரியாக காத்திருப்பதாக சமீபத்தில் அளித்து பேட்டியில் தெரிவித்துள்ளார். 

அப்பாஸ், கிரண் ரத்தோட், ஷகிலா. பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள் முழு பட்டியல் இதோ..!

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் தமிழ் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் நேற்று தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது.

பிரபல இசையமைப்பாளர் கார் விபத்தில் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்..!

கேரளாவிலிருந்து பிரபல இசையமைப்பாளர் தனது காரில் நண்பர்களுடன் சென்னை திரும்பிக் கொண்டிருந்த நிலையில் அந்த கார் விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே இசையமைப்பாளர் மறைந்த துயர சம்பவம் பெரும்