close
Choose your channels

தமிழை தாண்டி வேறு மொழி படத்தில் ஹீரோயின் ஆன அதிதி ஷங்கர்.. ஹீரோ யார் தெரியுமா?

Saturday, September 7, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் தமிழில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது வேறு மொழியிலும் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் கார்த்தி நடித்த ’விருமன்’ என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான நிலையில் முதல் படமே அவருக்கு வெற்றி படமாக அமைந்தது. இதனை அடுத்து சிவகார்த்திகேயன் நடித்த ’மாவீரன்’ என்ற திரைப்படத்தில் நடித்த நிலையில் தற்போது அவர் ஆகாஷ் முரளி நடிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகி வரும் ’நேசிப்பாயா’ என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழை தாண்டி தற்போது தெலுங்கு திரைப்படத்திலும் ஹீரோயினாக நடிக்க அதிதி ஷங்கர் ஒப்பந்தமாகியுள்ளார். பெல்லம் கொண்டா சாய் சீனிவாஸ் நாயகனாக நடிக்கும் படத்தில் தான் அவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை விஜய் கனக மெடலா இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை அதிதி ஷங்கர் சரளமாக தெலுங்கு மொழி பேசுபவர் என்பதால் தெலுங்கில் அவர் முன்னணி நடிகையாக ஜொலிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment