சித்தார்த் உடன் திருமணம் நடந்தது உண்மையா? அதிதிராவ் ஹைத்ரியின் ஒரே ஒரு வார்த்தையில் பதில்..!

  • IndiaGlitz, [Thursday,March 28 2024]

நடிகர் சித்தார்த், நடிகை அதிதி ராவ் ஹைத்ரியை நேற்று தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில் இன்று அதிதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து ஒரே ஒரு வார்த்தையில் விளக்கமளித்துள்ளார்.

நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஹைத்ரி ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் இருவரும் டேட்டிங் செய்வதாகவும் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்டிருப்பதாகவும் அவ்வப்போது செய்திகள் வெளியானது. இதனை அடுத்து இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் இருவரது நெருங்கிய வட்டாரங்கள் கூறின.

இந்த நிலையில் திடீரென நேற்று தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஸ்ரீரங்கபுரம் கோவிலில் சித்தார்த், அதிதி ராவ் ஹைத்ரி திருமணம் நடந்ததாகவும் இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மற்றும் கலந்து கொண்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் இந்த திருமணம் குறித்து சித்தார்த் மற்றும் அதிதி ராவ் ஹைத்ரி ஆகிய இருவருமே எந்த கருத்தையும் தெரியாமல் மௌனம் காத்தனர்.

இந்த நிலையில் சற்றுமுன் அதிதி ராவ் ஹைத்ரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’அவர் ஓகே சொல்லிவிட்டார்’ என்று கூறி ’நிச்சயதார்த்தம்’ என்று ஒரே ஒரு வார்த்தையில் தெரிவித்துள்ளார். அவர் பதிவு செய்த புகைப்படத்தில் இருவரும் மோதிரம் மாற்றி கொண்டதும் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து இருவருக்கும் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.