close
Choose your channels

கமல் பட இயக்குனரின் அடுத்த படத்தில் அதிதிராவ் ஹைத்ரி..ஹீரோ யார் தெரியுமா?

Friday, August 4, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’தூங்காவனம்’ என்ற படத்தை இயக்கிய ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிகை அதிதிராவ் ஹைத்ரி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. ‘தூங்காவனம்’ ’கடாரம் கொண்டான்’ ஆகிய படங்களை இயக்கிய ராஜேஷ் எம் செல்வா தற்போது ஒரு தமிழ் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஹீரோவாக அன்சால் பால் என்பவர், நாயகியாக கேதிகா சர்மா என்பவர் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் அதிதிராவ் ஹைத்ரி நடிக்க இருப்பதாகவும் அவர் கதையின் மையக் கருவுக்குரிய கேரக்டரில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆகஸ்ட் மூன்றாம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கி நடைபெற்று வருகிறது. சைமன் கிங் இசையமைக்கும் இந்த படம் பேமிலி பிரண்ட்ஷிப் மற்றும் ரொமான்ஸ் சம்பந்தப்பட்ட கதை கொண்டது என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ’தூங்காவனம்’ ’கடாரம் கொண்டான்’ என இரண்டு அதிரடி ஆக்சன் படங்களை இயக்கிய ராஜேஷ் எம் செல்வா, தற்போது பேமிலி செண்டிமெண்ட் கதை அம்சம் கொண்ட படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடப்பட்டது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment