பாடகியாக மாறிய மணிரத்னம் பட நாயகி
Send us your feedback to audioarticles@vaarta.com
மணிரத்னம் இயக்கிய 'காற்று வெளியிடை' மற்றும் செக்க சிவந்த வானம்' படங்களில் நடித்தவர் நடிகை அதிதிராவ் ஹைத்தி. இவர் தற்போது இரண்டு தெலுங்கு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் நடித்து இசையமைத்து வரும் 'ஜெயில்' படத்தில் ஒரு பாடலை அதிதிராவ் ஹைத்தி பாடியுள்ளார். 'காத்தோடு' என்று தொடங்கும் மெலடி டூயட் பாடலை அதிதியும் ஜிவி பிரகாஷூம் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இந்த பாடலை பாடியது தனக்கு நல்ல அனுபவமாக இருந்ததாக அதிதி தனது சமூகவலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
வசந்தபாலன் இயக்கி வரும் 'ஜெயில்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என தெரிகிறது.
Recorded my first song in Tamil!??
— Aditi Rao Hydari (@aditiraohydari) December 5, 2018
Butterflies in my tummy! Thank you for trusting me with such a pretty song and guiding me through so smoothly @gvprakash... ??????
all the best to you and @vasantabalan sir for #Jail ?? pic.twitter.com/XhMy3l0fRB
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments