கேன்ஸ் விழாவில் ஒரு மஞ்சள் மேகம்… மணிரத்னம் பட நடிகையை கொண்டாடும் ரசிகர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குநர் மணிரத்னம் இயக்கிய திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமான நடிகை ஒருவர் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்றுவரும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்ட நிலையில் ரசிகர்கள் அவருக்குப் பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர்.
இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ‘செக்க சிவந்த வானம்’ திரைப்படத்திலும் பின்னர் ‘காற்று வெளியிடை’ திரைப்படத்திலும் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றவர் நடிகை அதிதிராவ் ஹைதாரி. நடிப்பைத் தவிர பாடகி மற்றும் நடனக் கலைஞராகவும் இருந்துவரும் இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவரது நடிப்பில் வெளியான ‘ஜுப்லி மற்றும் தாஜ் டிவைடட் பிளட்‘ எனும் வெப் சீரிஸ் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதன் இரண்டாவது பாகத்திலும் நடித்துவரும் நிலையில் பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகிவரும் ‘ஹீரமண்டி‘ வெப் சீரிஸிலும் இவர் இணைந்து நடித்துவருகிறார்.
இப்படி பாலிவுட், தமிழ், தெலுங்கு மொழி சினிமாக்களில் பிரபலமாக இருந்துவரும் நடிகை அதிதிராவ் ஹைதாரி இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற கேன்ஸ் விழாவில் இவர் வெள்ளை நிறத்திலான சேலை மற்றும் பிங்க் நிறத்திலான கவுனை அணிந்திருந்தார். இந்நிலையில் இந்த ஆண்டு மஞ்சள் மேகம் போன்று காட்சியளிக்கும் சிறப்பான கவுன் தோற்றத்தில் இவர் இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில் நடிகை அதிதிராவ் ஹைதாரியின் மஞ்சள் நிற கவுன் தோற்றத்தைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments