பிரிட்டிஷ் நடிகையா இவர்? ரசிகர்களையே குழப்பிவிட்ட இளம் நடிகையின் வைரல் புகைப்படம்

  • IndiaGlitz, [Thursday,July 06 2023]

தமிழ், இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை ஒருவர் தன்னுடைய ஹேர் ஸ்டைலை முற்றிலும் மாற்றி புகைப்படம் வெளியிட்டு இருக்கும் நிலையில் அவர் பார்ப்பதற்கு பிரிட்டிஷ் நடிகை ஆட்ரி ஹெப்பர்சனைப் போன்று இருப்பதாக ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். மேலும் அந்தப் புகைப்படம் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

மலையாள சினிமாவில் கடந்த 2006 இல் வெளியான ‘பிரஜாபதி’ திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை அதிதிராவ் ஹைதாரி. தற்போது இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவருடைய இயல்பான நடிப்பு ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுவரும் நிலையில் சிறந்த நடன கலைஞராகவும் அதே நேரத்தில் பின்னணி பாடகியாகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை அதிதிராவ் ஹைதாரி, இயக்குநர் மணிரத்தினம் இயக்கிய ‘காற்று வெளியிடை’ திரைப்படத்திலும் அதேபோல ‘செக்க சிவந்த வானம்’ திரைப்படத்திலும் நடித்து தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இந்தியில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ஜுப்ளி‘ மற்றும் ‘தாஜ் பிளட் டை பிளட்‘ திரைப்படங்கள் விமர்சன ரீதியாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.

இதைத்தவிர இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் ‘ஹுரமாண்டி‘ மற்றும் ‘காந்தி டாக்ஸ்‘ போன்ற திரைப்படங்களில் இணைந்து நடித்து வருகிறார். இப்படி நடிப்பு, பின்னணி பாடகி என்று படு பிசியாக இருந்துவரும் நடிகை அதிதிராவ் ஹைதாரி நடிகர் சித்தார்த்தை காதலித்து வருவதாக ஊகடங்களில் தகவல் வெளியாகி வருகிறது. இதுகுறித்துப் பேசிய அவர் ‘தனிப்பட்ட விஷயங்கள் நுகர்வுக்கானது அல்ல‘ என்று படு போல்டாக பதில் அளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருந்துவரும் இவர் தற்போது புதிய போட்டோஷுட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் தனது ஹேர் டைலை முற்றிலும் மாற்றி பொம்மை போன்று காட்சி அளிக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் தோற்றத்தில் பிரிட்டிஷ் நடிகை ஆட்ரி ஹெப்பர்சனை நினைவுப்படுத்துகிறது. அவருடைய தோற்றத்தைத்தான் முயற்சித்தீர்களா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பெல்ஜியத்தில் பிறந்த அமெரிக்க நடிகையாக ஆட்ரி ஹெப்பர்சன் கடந்த காலத்தில் உலக அளவில் பிரபலமான நடிகைகளுள் ஒருவராக இருந்து வந்துள்ளார். அந்தக் காலக்கட்டத்திலேயே பேஷன் ஐகான் என்று ரசிகர்களிடையே கொண்டாடப்பட்டு இருக்கிறார். அந்த நடிகையைப் போன்று காட்சியளிக்கும் நடிகை அதிதி ராவ் ஹைதாரியின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் படு வேகமாக வைரலாகி வருகின்றன.