சென்னை தொழிலதிபராக மாறிய மணிரத்னம் பட நாயகி!

  • IndiaGlitz, [Friday,November 29 2019]

பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய ’காற்று வெளியிடை’ என்ற படத்தின் நாயகியாகவும் அதன் பின்னர் அவர் இயக்கிய ’செக்கச் சிவந்த வானம்’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் நடிகை அதிதி ராவ் ஹைத்ரி. இவர் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவாகிவரும் ’சைக்கோ என்ற படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படம் வரும் டிசம்பர் 27ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ’துக்ளக் தர்பார்’ என்ற படத்திலும் அதிதிராவ் ஹைத்ரி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அதிதி ராவ் ஹைதாரி தொழிலதிபராக மாறியுள்ளார். ஆம் நடிகை அதிதி டென்னிஸ் பிரீமியர் லீக்கில் சென்னையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ’Chennai Stallions’ என்றா டென்னிஸ் அணியை வாங்கியுள்ளார். இதன் மூலம் சென்னை தொழிலதிபர் மாறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை டென்னிஸ் அணியில் அங்கிதா, சகேத், ஜீவன், புரவ் உள்ளிட்டோர் வரும் டென்னிஸ் லீக் பிரிமியரில் விளையாடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னை ஒரு டென்னிஸ் வீராங்கனையாக மாற்ற வேண்டும் என்பது தனது கனவு என்றும் ஆனால் தான் டான்ஸ், சினிமா ஆகியவைகளில் விருப்பம் கொண்டு நடிகையாகிவிட்டதாகவும், தற்போது தந்தையின் கனவை நனவாக்கும் வகையில் டென்னிஸ் அணியை வாங்கியுள்ளதாகவும் அதிதிராவ் ஹைத்ரி தெரிவித்துள்ளார்.
 

More News

 ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் பிக்பாஸ் நடிகையின் 'த்ரில்' படம்

விஜய் சேதுபதி நடித்த 'புரியாத புதிர்' மற்றும் ஹரிஷ் கல்யாண் நடித்த 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' ஆகிய படங்களை இயக்கியவர் ரஞ்சித் ஜெயக்கொடி.

இருமலுக்கு நரம்பு ஊசியா? பட்டதாரி இளம்பெண் பரிதாப மரணம்

சாதாரண இருமல் மற்றும் வாந்திக்கு நரம்பு ஊசி போட்டதால் பெண் பட்டதாரி ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சென்னை அருகே நடந்துள்ளது 

உயிரோடு எரித்து கொல்லப்பட்ட பெண் டாக்டர்: அதிர்ச்சி தகவல்

தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஐதராபாத்தில் பெண் டாக்டர் ஒருவர் நேற்று இரவு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

கார்த்தியின் அடுத்த படத்தின் சென்சார் தகவல்கள்

கார்த்தி, ஜோதிகா இணைந்து நடித்த 'தம்பி' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்த நிலையில் இந்த படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

எவன் வந்தாலும் சரி, நான் பாத்துக்கிறேன்: கவுதம் மேனனின் 'ஜோஸ்வா' டிரைலர்

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வருண் நடிப்பில் உருவாகிவரும் 'ஜோஸ்வா இமைபோல் காக்க' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில்,