'ஆதிபுருஷ்' படத்தில் சீதை கேரக்டர்.. பிரபல நடிகையின் மாஸ் போஸ்டர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபாஸ் நடித்து வரும் ‘ஆதிபுருஷ்’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தில் சீதையாக நடித்து வரும் கீர்த்தி சனோன் மாஸ் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இந்திய இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தை தழுவி எடுக்கப்படும் திரைப்படம் ‘ஆதிபுருஷ்’. ரூ.600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தில் ராமன் கேரக்டரில் பிரபாஸ், சீதை கேரக்டரில் கீர்த்தி சனோன் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் சயிப் அலிகான் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் ஜூன் 16ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தில் பிரபாஸ் கேரக்டரின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது சீதை கேரக்டரில் நடித்த கீர்த்தி சனோன் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டருக்கு ரசிகர்களின் ஆதரவு பெருகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
7000 ஆண்டுகளுக்கு முன்னர் அயோத்தியில் அரசராக இருந்த ராமர், இலங்கை சென்று அனுமன் உதவியோடு கடத்தப்பட்ட தனது மனைவி சீதாவை மீட்டுக் கொண்டு வந்த கதை தான் ‘ஆதிபுருஷ்’ என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ராவணன் கேரக்டரில் சயிப் அலிகான் நடித்துள்ளார் என்பதும் அனுமன் கேரக்டரில் தேவதத்தா நாகே என்பவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹிந்தி மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் இந்த படம் தமிழ் உள்பட பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
सीता राम चरित अति पावन
— T-Series (@TSeries) April 29, 2023
The righteous saga of Siya Ram
Jai Siya Ram
जय सिया राम
జై సీతారాం
ஜெய் சீதா ராம்
ಜೈ ಸೀತಾ ರಾಮ್
ജയ് സീതാ റാം#Adipurush #SitaNavmi #Prabhas @omraut #SaifAliKhan @kritisanon @mesunnysingh #BhushanKumar #KrishanKumar @vfxwaala @rajeshnair06 @DevdattaGNage… pic.twitter.com/OE89q186RU
अमर है नाम, जय सिया राम।🙏
— T-Series (@TSeries) April 29, 2023
The eternal chant, Jai Siya Ram. 🙏
అమరం, అఖిలం
ఈ నామం,
సీతారాముల ప్రియనామం🙏
அழியா நின் நாமம்
ஜெய் சீதாராம்🙏
ಅಮರ ನಿಮ್ಮ ನಾಮ
ಜೈ ಸೀತಾ ರಾಮ🙏
എന്നേക്കും ശാശ്വതമാണ്
ജയ് സീതാ റാം🙏
Jai Siya Ram
जय सिया राम
జై సీతారాం
ஜெய் சீதா ராம்
ಜೈ ಸೀತಾ ರಾಮ್ pic.twitter.com/tkRlhsar4Y
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com