என்னை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்தார். பிரபல நடிகை மீது கணவர் குற்றச்சாட்டு..!

  • IndiaGlitz, [Tuesday,August 22 2023]

பொதுவாக நடிகைகள் தான் தங்கள் கணவர் தங்களை கொடுமைப்படுத்துவதாக குற்றச்சாட்டு கூறுவது உண்டு. ஆனால் ஒரு நடிகையின் கணவர் தன்னை நிர்வாணமாக்கி தனது மனைவி கொடுமைப்படுத்தினார் என்று பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்தான் நடிகை ராக்கி சாவந்த் கணவர் ஆதில்.

நடிகை ராக்கி சாவந்த் ஏற்கனவே ரித்தேஷ் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவரை விவாகரத்து செய்துவிட்டு கடந்த 2021 ஆம் ஆண்டு ஆதில் துராணி என்பவரை திருமணம் செய்தார். இந்த நிலையில் திருமணம் ஆன சில மாதங்களில் தன்னுடைய கணவர் தன்னை கொடுமைப்படுத்துகிறார் என்று போலீசில் ராக்கி சாவந்த் புகார் அளித்ததால் ஆதில் கைது செய்யப்பட்டார்

ஐந்து மாத சிறைவாசத்திற்கு பிறகு தற்போது ஜாமினில் வெளிவந்துள்ள ஆதில், செய்தியாளர்களை சந்தித்தபோது சில திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார். உண்மையில் நான் ராக்கி சாவந்தை தாக்கவில்லை, அவர்தான் என்னை பலமுறை தாக்கியுள்ளார். எனக்கு போதை மருந்து கொடுத்து, நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து வைத்துள்ளார். என்னுடைய பெயரை கெடுக்கவும், என்னை ஓரினச்சேர்க்கையாளர் என்று முத்திரை குத்தவும் அவர் முயற்சி செய்து என்னை மிரட்டி வருகிறார்

என்னை திருமணம் செய்த பின்னரும் அவர் முதல் கணவருடன் தொடர்பில் இருந்தார் என்பது எனக்கு தெரிய வந்தது. இதனால் தான் என்னை அவர் மிரட்டி கொடுமைப்படுத்தி வருகிறார் என்று ஆதில் கூறியுள்ளார். அவருடைய இந்த குற்றச்சாட்டு பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.