70 நாடுகளில் உள்ள தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் பிரபல நடிகர் படத்தின் டீசர்.. உலக அளவில் புரமோஷன்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகர் நடித்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வரும் மே 9ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த ட்ரெய்லர் 70 நாடுகளில் உள்ள திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடித்த ’ஆதி புருஷ்’ என்ற திரைப்படம் தமிழ் உட்பட பல மொழிகளில் உருவாகி வருகிறது என்பதும் இந்த படம் வரும் ஜூன் 16ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கம்பராமாயணத்தில் உள்ள ஸ்ரீ ராமரின் கதை அம்சம் கொண்ட இந்த படத்தில் ஏராளமான கம்ப்யூட்டர் விஷுவல் கிராபிக் காட்சிகள் உள்ளது என்பதும் அது பார்வையாளர்களுக்கு மிகப்பெரிய அனுபவத்தை கொடுக்கும் என்றும் படக்குழுவினர் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்
இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் வரும் 9ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் 70 நாடுகளில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் செய்து சர்வதேச சர்வதேச அளவில் புரமோஷன் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்
பிரபாஸ், கீர்த்தி சனோன், சைப் அலிகான் உட்பட பலர் நடித்த இந்த திரைப்படத்தை ஓம் ரெளட் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு சாசெட் பரம்பரா இசையமைத்துள்ளார்.
జై శ్రీరాం 🏹
— UV Creations (@UV_Creations) May 6, 2023
The Most Awaited Trailer of the Year #AdipurushTrailer 🛕is all set to be screened in the following theaters on 9th May.
Don't miss your chance to witness The Epic Saga of Courage & Devotion🕉 on the big screen💥#Adipurush #AdipurushTrailerOnMay9th#Prabhas… pic.twitter.com/48TMWthvI1
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com