'ஆதி புருஷ்' படத்தின் மூன்றாவது ரிலீஸ் தேதி: இதிலாவது ரிலீஸ் ஆகுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடித்த ‘ஆதி புருஷ்’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே இரண்டு முறை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மூன்றாவது முறையாக புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
ராமாயணத்தில் உள்ள ராமரின் கதையான ‘ஆதி புருஷ்’ திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. 7,000 ஆண்டுக்கு முந்தைய இந்த இதிகாச கதையை பாலிவுட் திரையுலகினர் பிரமாண்டமாக படமாக்கி வருகின்றனர். தமிழ் உள்பட அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் உருவாகி வரும் இந்த படம் முதலில் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீசாவதாக அறிவிக்கப் பட்டது.
அதன் பின் ஒரு சில காரணங்களால் இந்த படம் 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்த படத்தின் டீசர் வெளியான நிலையில் அந்த டீசரில் உள்ள கிராபிக்ஸ் காட்சிகள் நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டன. இதனை அடுத்து முழுக்க முழுக்க கிராபிக்ஸ் காட்சிகளை மாற்றம் செய்ய படக்குழு முடிவு செய்து இருப்பதாகவும் இதனால் கூடுதல் கால அவகாசம் ஏற்படும் என்பதால் மீண்டும் ரிலீஸ் தேதி மாற்றப்படலாம் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இதுகுறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘ஆதி புருஷ்’ திரைப்படம் பகவான் ஸ்ரீ ராமரின் கதையம்சம் கொண்டது என்பதால் இந்த படத்தை மிகவும் கச்சிதமாக உருவாக்க முடிவு செய்துள்ளோம். குறிப்பாக விசுவல் அனுபவம் பார்வையாளர்களுக்கு மிகப்பெரிய அளவில் இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு பெரிய குழுவே செய்து வருகிறது. இதனால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி 2023ம் ஆண்டு ஜூன் 16-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது முறையாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தேதியிலாவது படம் வெளிவருமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. பிரபாஸ், கீர்த்தி சனோன், சைப் அலிகான் உள்பட பலர் நடித்த இந்த திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.
जय श्री राम…#Adipurush releases IN THEATRES on June 16, 2023.#Prabhas #SaifAliKhan @kritisanon @mesunnysingh #BhushanKumar #KrishanKumar @vfxwaala @rajeshnair06 #ShivChanana @manojmuntashir @TSeries @RETROPHILES1 @UV_Creations @Offladipurush pic.twitter.com/kXNnjlEsib
— Om Raut (@omraut) November 7, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout