தான் சமைத்த ரோஸ் அல்வாவை தன் மனைவிக்கு ஊட்டிவிடும் ஆதி குணசேகரன்

  • IndiaGlitz, [Wednesday,July 05 2023]

பிரபல தொலைக்காட்சி தொடரான எதிர்நீச்சல் தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகர்கள் ஆதி குணசேகரன் மற்றும் ஜான்சி ராணி. இவர்கள் இருவரும் சேர்ந்து ரோஸ் அல்வா எப்படி சமைப்பது என நமக்கு சமைத்து காட்டினார்.இந்த கலகலப்பான சமையல் வீடியோவில் சமைத்து கொண்டிருக்கும் போது ஜான்சி ராணி என்கின்ற காயத்ரி அவர்கள் குணசேகரன் அவர்களிடம் நீங்கள் படப்பிடிப்பில் அதிகம் கோவப்படுவதாக கூறப்படுகிறதே ? என்று கேட்டார் .

அதற்கு குணசேகரன் அவர்கள் நான் கோவப்படுவேன் தான் இல்லை என கூறவில்லை ஆனால் அந்த கோவம் காட்சி நன்றாக வரவேண்டும் என்பதற்க்காக மட்டுமே இருக்கும் மற்றபடி என்னுடைய ஆளுமையை காட்ட வேண்டும் என்பதற்க்காகவோ நான் நடிகன் என்பதை நிரூபிப்பதற்க்காகவோ இருக்காது என்று கூறினார்.இறுதியில் தான் சமைத்த ரோஸ் அல்வாவை தன் மனைவிக்கு பரிமாறினார்.