சென்னை பாக்ஸ் ஆபீஸில் தனி முத்திரை பதித்த 2 படங்கள்

  • IndiaGlitz, [Monday,January 30 2017]

சென்னை பாக்ஸ் ஆபீஸில் பொதுவாக பெரிய ஸ்டார் படங்கள் மட்டுமே சாதனை வசூலை புரிந்து வருகின்றன. மிகவும் அபூர்வமாக வித்தியாசமான கதையம்சங்களை கொண்ட புதுமுகங்கள் படங்கள் அவ்வப்போது சென்னை வசூலில் முத்திரை பதிப்பதுண்டு. அவ்வாறு சென்னை வசூலில் சமீபத்தில் சாதனை செய்த படங்களாக அறிமுக இயக்குனர் கார்த்திக் நரேனின் 'துருவங்கள் 16' மற்றும் சி.வி.குமார் தயாரிப்பில் கலையரசன் நடிப்பில் வெளியான 'அதே கண்கள்' ஆகிய படங்கள் கருதப்படுகிறது.
கடந்த டிசம்பர் 30ஆம் தேதி வெளியான கார்த்திக் நரேனின் 'துருவங்கள் 16' படம் கடந்த வார இறுதி நாட்களில் 8 திரையரங்குகளில் 52 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.5,09,610 வசூல் செய்துள்ளது. இந்த படத்தின் மொத்த சென்னை வசூல் ரூ.1,44,15,690 ஆகும்
அதேபோல் குடியரசு தினமான ஜனவரி 26ல் வெளியான 'அதே கண்கள்' திரைப்படம் கடந்த வார இறுதி நாட்களில் 11 திரையரங்குகளில் 98 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.18,16,060 வசூல் செய்துள்ளது. ஜனவரி 26 முதல் ஜனவரி 29 முதல் இந்த படம் ரூ.25,32,040 வசூல் செய்துள்ளது.
பெரிய ஸ்டார்கள் இல்லாமல் இரு படங்களும் நல்ல கதைக்காகவே வசூல் மழை பொழிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஜய்யின் 'பைரவா' படத்தின் கடந்தவார சென்னை வசூல் நிலவரம்

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளிவந்து கலவையான விமர்சனங்கள் மற்றும் ஜல்லிக்கட்டு போராட்டம் ஆகியவற்றையும் மீறி தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களாக திருப்திகரமான வசூலை தந்து கொண்டிருந்தது என்பதை பார்த்தோம்

கடைசி பந்துக்கு முன்னர் பூம்ராவிடம் விராத் கோஹ்லி கூறியது என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களாக சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் நிலையில் ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இந்தியா வென்றுள்ளது

சென்னையில் மூடப்பட்ட முப்பது ஆண்டுகால சினிமா பொக்கிஷம்

கடந்த 30 ஆண்டுகளாக சென்னையில் இயங்கி வந்த சினிமா வீடியோ நூலகம் தற்போது மூடப்பட்டது...

ரிலீசுக்கு முன்பே ரூ.100 கோடி. 'சி 3' தயாரிப்பாளர் தகவல்

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான 'சி3' படத்தின் பிரஸ்மீட் நேற்று நடந்தது. இதில் சூர்யா, ஞானவேல்ராஜா, ஹரி உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்...

என்னையும் கைது செய்யுங்கள். சிம்புவின் ஆவேச பேட்டி

சென்னை மெரீனாவில் மாணவர்கள் நடத்திய போராட்டம் வெற்றி பெற்றாலும் கடைசி தினத்தில் ஏற்பட்ட வன்முறைக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக மாணவர்கள் மற்றும் மீனவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு பெரும் கண்டனங்கள் எழுந்தன...