விஜய்யுடன் புத்தக விழாவில் கலந்து கொண்ட ஆதவ் அர்ஜூன் சஸ்பெண்ட்..  6 காரணங்கள் கூறிய திருமாவளவன்..!

  • IndiaGlitz, [Monday,December 09 2024]

சமீபத்தில் விகடன் நிறுவனம் நடத்திய ’எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா கலந்துகொண்டனர்.

இந்த விழா பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் இந்த விழாவில் விஜய் மற்றும் ஆதவ் அர்ஜூனா ஆகிய இருவருமே திமுக ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்தனர் என்பதும் இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் விஜய்யுடன் அம்பேத்கர் புத்தகம் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட ஆதவ் அர்ஜுனா ஆறு மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். ஆதவ் அர்ஜூனா சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு அவர் காரணங்களையும் தெரிவித்துள்ளார். அந்த காரணங்கள் பின்வருமாறு:

1. கட்சியின் துணை பொதுச் செயலாளர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் அண்மைக் காலமாக கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது தலைமை நிர்வாகத்தின் கவனத்துக்குத் தெரிய வந்தது.

2. இது குறித்து கடந்த 07-12-2024 அன்று கட்சியின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணித் தோழர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது.

3. கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களையும் மீறி, தொடர்ச்சியாக அவர் எதிர்மறையாக செயல்பட்டு வருவதும்; அத்தகைய செயல்பாடுகள், மேலோட்டமாக நோக்கினால் கட்சியின் நலன் மற்றும் அதிகார வலிமைக்கானதாகத் தோன்றினாலும்; அவை கட்சி மற்றும் தலைமையின் மீதான நன்மதிப்பையும் நம்பகத் தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில், பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.

4. இத்தகைய போக்குகள், கட்சிப் பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கும் வகையில், கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கட்சியினருக்கு இது ஒரு தவறான முன்மாதிரியாக அமைந்து விடும் என்கிற சூழலையும் உருவாக்கியுள்ளது.

5. இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டு, கட்சியின் நலன்களை முன்னிறுத்தி,கட்சித் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்கள் ஆகிய மூவர் உள்ளடங்கிய தலைமை நிர்வாகக் குழுவில், திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.

6. அதன்படி, திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார்.

More News

கமல்ஹாசனுடன் இன்னொரு படம்.. உறுதி செய்த லோகேஷ் கனகராஜ்.. ஆனால் எப்போது?

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கிய நிலையில், சமீபத்தில் நடந்த திரைப்பட விழா ஒன்றில் கமல்ஹாசன் உடன் இன்னொரு படத்தில்

'சூர்யா 45' படத்தின் இசையமைப்பாளர் திடீர் மாற்றம்.. ஏஆர் ரஹ்மானுக்கு பதில் யார்?

சூர்யா நடித்து வரும் 45வது திரைப்படத்தில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பார் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,

திருவண்ணாமலை மண் சரிவில் 7 பேர் உயிரிழந்த சம்பவம்: ரஜினிகாந்த் கொடுத்த ரியாக்சன்..!

சமீபத்தில் திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்டு ஒரே வீட்டில் இருந்த ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கிய நிலையில், இந்த சம்பவத்திற்கு ரஜினிகாந்த் தனது அதிர்ச்சியை

பாலாவின் 25 ஆண்டு கலைப்பயண விழாவுடன் இன்னொரு விழா: சுரேஷ் காமாட்சி அறிவிப்பு..

இயக்குனர் பாலா கடந்த 1999 ஆம் ஆண்டு 'சேது' என்ற படத்தை இயக்கிய நிலையில் அந்த படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதனை அடுத்து பாலாவின் 25 ஆண்டுகால திரை

சூப்பர் சிங்கர் மேடையில் ஒலித்த சிறுவனின் ஆசை.. ஒரு கிராமத்தின் பல வருட ஏக்கம் நிறைவேறியது!

ஒரு சின்னஞ்சிறிய  பையன், தன் தாய் தந்தைக்கும் தன் கிராமத்துக்கும் பெருமை சேர்த்துள்ளான்.  சூப்பர் சிங்கர் ஜூனியர் பத்தாவது  சீசன் பார்ப்பவர்கள் அனைவரும் இந்த சிறுவனை அறிந்திருப்பர்.