சலூன் கடைக்கு செல்ல ஆதார் அவசியம்: தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்த நிலையில் தற்போது ஐந்தாம் கட்ட ஊரடங்கில் பொது மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் ஒரு சில தளர்வுகள் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று முதல் சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சலூன் கடைகள் இயங்க அனுமதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி அழகு நிலையங்கள், ஸ்பா நிலையங்களும் நிபந்தனையுடன் அனுமதிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது திடீரென சலூன் கடைகள் அழகு நிலையங்கள், ஸ்பா நிலையங்களுக்கு செல்பவர்கள் ஆதார் அட்டையை கொண்டு செல்வது அவசியம் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. வாடிக்கையாளரின் பெயர், முகவரி, செல்போன் எண், ஆதார் விவரங்களை சலூன் கடைகாரர்கள் பதிவேட்டில் குறித்துக் கொள்ள வேண்டும் என்று சலூன் கடைக்காரர்களுக்கு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இன்று முதல் சலூன் கடைகளுக்கு முடிவெட்ட செல்வோர் ஆதார் அட்டையை கையில் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சலூன் கடைகளில் முடிவெட்டி செல்பவருக்கு கொரோனா ஏற்பட்டால் அவர்களை எளிதில் அடையாளம் காணவே இந்த ஏற்பாடு என தமிழக அரசு அறிவித்துள்ளது.

More News

ரோஜா படத்தை இயக்குகிறாரா மணிரத்னம்? பிரல ஹீரோவிடம் பேச்சுவார்த்தை!

தமிழில் பிரபல இயக்குனராக இருந்த மணிரத்தினம் அவர்களை இந்திய அளவில் புகழ் பெற வைத்த திரைப்படம் 'ரோஜா' என்றால் அது மிகையாகாது.

ஒற்றுமையே உயர்வு: 'காட்மேன்' சீரியல் குறித்து தமிழ் நடிகரின் டுவீட்

பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் டேனியல் பாலாஜி, ஜெயபிரகாஷ், சோனியா அகர்வால் உள்பட பலர் நடித்த 'காட்மேன்' என்ற வெப்தொடர் வரும் 12ம் தேதி ஜீ டிவியில் ஒளிபரப்பாக இருந்த நிலையில்

“ஆர்மோனியக் கலைஞன், இசை சாம்ராஜ்யம்” இளையராஜா பிறந்த நாள் இன்று...

“இறைவனுக்கு அடுத்தப்படியாக இந்த உலகில் எனக்கு இருக்கக் கூடிய ஒரே நண்பன் இந்த ஆர்மோனியம்தான்” என மாணவர்கள் மத்தியில் ஒருமுறை இளையராஜா உரையாற்றினாராம்

'கோப்ரா' பட நடிகைக்கு நிச்சயதார்த்தம்: லாக்டவுன் முடிந்தவுடன் திருமணம்

தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்று வளர்ந்து வரும் நடிகை ஒருவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. லாக்டவுன் முடிந்த உடன் திருமணம் நடைபெறும்

உங்களுடைய ஹெல்த் இன்ஷுரன்ஸ்ஐ வைத்து கொரோனா நோய்த்தொற்றுக்கு க்ளைம் பண்ண முடியுமா???

கொரோனா பரவல் நேரத்தில் புதிதாக அதற்கு என்று பாலிசி எடுக்கலாமா? அல்லது ஏற்கனவே இருக்கும் பாலிசிக்களை இதற்கு பயன்படுத்த முடியுமா என்ற சந்தேகத்தையும் ஒரு சிலர் எழுப்புகின்றனர்.