ஐஏஎஸ் அதிகாரிகள் கெடுபிடி தாங்கல... வேலையை உதறிவிட்டு ஆட்டோ ஓட்டும் அரசு மருத்துவர்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கர்நாடக மாநிலத்தில் அரசு மருத்துவர் ஒருவர் தனது வேலையை உதறிவிட்டு சொந்த ஊரில் ஆட்டோ ஒட்டி பிழைப்பு நடத்தத் தொடங்கியிருக்கிறார். அவரது ஆட்டோவில் தன்னுடைய நிலைக்கு ஐஏஎஸ் அதிகாரிகள்தான் காரணம் என்ற வாசகத்தையும் எழுதி வைத்திருக்கிறார். இதனால் அம்மாநிலத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீ ராமுலு இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
பல்லாரி மாவட்டத்தில் உள்ள பிம்ஸ் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி நிபுணராக வேலைப்பார்த்து வந்தவர் டாக்டர் ரவீந்திரநாத். இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்த பணிகளுக்கு பொறுப்பு வகிக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் டாக்டர் ரவீந்திரநாத்தை தினமும கொரோனா வார்டில் வேலைப் பார்க்குமாறு கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஐஏஎஸ் அதிகாரிகளுடன் மருத்துவர் வாக்குவாதத்திலும் ஈடுபட்டு இருக்கிறார். இதையடுத்து மருத்துவர் ரவீந்திரநாத்துக்கு கட்டாய விடுப்பு அளிக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது. விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பினாலும் மறுபடியும் விடுப்பு அளித்து விடுவதால் ரவீந்திரநாத் மனமுடைந்து இருக்கிறார்.
இந்நிலையில் அரசு வேலையே வேண்டாம் என உதறித்தள்ளிவிட்டு சொந்த ஊரான பல்லாரி மாவட்டத்தின் படா கிராமத்திற்கு குடும்பத்துடன் இடம் பெயர்ந்திருக்கிறார் ரவீந்திரநாத். அங்கு ஆட்டோ ஓட்டவும் தொடங்கியிருக்கிறார். தான் ஓட்டும் ஆட்டோவில் ஐஏஎஸ் அதிகாரிகளின் கெடுபிடியை வாசகமாகவும் எழுதி வைத்திருக்கிறார்.
இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு உங்கள் பிரச்சனை தொடர்பாக விசாரணை நடத்தப்படும். நீங்கள் மீண்டும் மருத்துவப் பணிக்கு வாருங்கள் என அழைப்பு விடுத்திருக்கிறார். இதனால் மருத்துவர் ரவீந்திரநாத், அமைச்சர் ஸ்ரீ ராமுலுவைச் சந்தித்து முறையான புகார் அளிக்க இருப்பதாகவும் மீண்டும் பணிக்குச் செல்ல இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments