ஐஏஎஸ் அதிகாரிகள் கெடுபிடி தாங்கல... வேலையை உதறிவிட்டு ஆட்டோ ஓட்டும் அரசு மருத்துவர்!!!

  • IndiaGlitz, [Monday,September 07 2020]

 

கர்நாடக மாநிலத்தில் அரசு மருத்துவர் ஒருவர் தனது வேலையை உதறிவிட்டு சொந்த ஊரில் ஆட்டோ ஒட்டி பிழைப்பு நடத்தத் தொடங்கியிருக்கிறார். அவரது ஆட்டோவில் தன்னுடைய நிலைக்கு ஐஏஎஸ் அதிகாரிகள்தான் காரணம் என்ற வாசகத்தையும் எழுதி வைத்திருக்கிறார். இதனால் அம்மாநிலத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீ ராமுலு இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

பல்லாரி மாவட்டத்தில் உள்ள பிம்ஸ் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி நிபுணராக வேலைப்பார்த்து வந்தவர் டாக்டர் ரவீந்திரநாத். இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்த பணிகளுக்கு பொறுப்பு வகிக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் டாக்டர் ரவீந்திரநாத்தை தினமும கொரோனா வார்டில் வேலைப் பார்க்குமாறு கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஐஏஎஸ் அதிகாரிகளுடன் மருத்துவர் வாக்குவாதத்திலும் ஈடுபட்டு இருக்கிறார். இதையடுத்து மருத்துவர் ரவீந்திரநாத்துக்கு கட்டாய விடுப்பு அளிக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது. விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பினாலும் மறுபடியும் விடுப்பு அளித்து விடுவதால் ரவீந்திரநாத் மனமுடைந்து இருக்கிறார்.

இந்நிலையில் அரசு வேலையே வேண்டாம் என உதறித்தள்ளிவிட்டு சொந்த ஊரான பல்லாரி மாவட்டத்தின் படா கிராமத்திற்கு குடும்பத்துடன் இடம் பெயர்ந்திருக்கிறார் ரவீந்திரநாத். அங்கு ஆட்டோ ஓட்டவும் தொடங்கியிருக்கிறார். தான் ஓட்டும் ஆட்டோவில் ஐஏஎஸ் அதிகாரிகளின் கெடுபிடியை வாசகமாகவும் எழுதி வைத்திருக்கிறார்.

இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு உங்கள் பிரச்சனை தொடர்பாக விசாரணை நடத்தப்படும். நீங்கள் மீண்டும் மருத்துவப் பணிக்கு வாருங்கள் என அழைப்பு விடுத்திருக்கிறார். இதனால் மருத்துவர் ரவீந்திரநாத், அமைச்சர் ஸ்ரீ ராமுலுவைச் சந்தித்து முறையான புகார் அளிக்க இருப்பதாகவும் மீண்டும் பணிக்குச் செல்ல இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

More News

ஐபிஎல் 2020: சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிகள் நடக்கும் தேதிகள்!

2020ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டி வரும் 19ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை ஐக்கிய் அரபு எமிரேட் நாட்டில் நடைபெறவிருக்கும் நிலையில் சற்றுமுன்னர் இந்த போட்டிகளின் அட்டவணை வெளியாகியது

கைது செய்யப்பட்ட ராகினி திவேதி பாஜக உறுப்பினரா? கர்நாடக பாஜக விளக்கம்

கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவரும் போதைப்பொருள் விவகாரத்தில் சமீபத்தில் நடிகை ராகினி திவேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து கொண்டிருக்கும்

சம்யுக்தா ஹெக்டே ஸ்போர்ட்ஸ் பிரா அணிந்து உடற்பயிற்சி செய்தாரா? காங்கிரஸ் பெண் பிரமுகர்

ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை சம்யூக்தா ஹெக்டே, சமீபத்தில் பெங்களூரில் உள்ள ஒரு பூங்காவில் ஸ்போர்ட்ஸ் பிரா அணிந்து உடற்பயிற்சி செய்ததாகவும்

தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய சென்னை ஆசிரியர்: பலமணி நேரம் தேடியும் கிடைக்காததால் பரபரப்பு

சென்னையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கொரோனா விடுமுறையில் நெல்லையில் உள்ள தனது சகோதரர் வீட்டிற்கு சென்ற நிலையில் அங்கு தாமிரபரணி ஆற்றில் திடீரென மூழ்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

போனிகபூர் குடும்ப உறுப்பினருக்கு கொரோனா: அறிகுறியின்றி தாக்கியதால் அதிர்ச்சி

அஜித் நடித்து வரும் 'வலிமை' படத்தை தயாரித்து வரும் போனிகபூர் வீட்டில் பணி செய்து கொண்டிருந்த 23 வயது இளைஞர் ஒருவருக்கும் அவருடைய வீட்டில் பணிசெய்த மேலும் இருவருக்கும்