நாளை முதல் கடைகள் திறக்கும் நேரம் குறைப்பு: தமிழக அரசு அதிரடி உத்தரவு
- IndiaGlitz, [Friday,May 14 2021]
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து மே 10ஆம் தேதி முதல் மே 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது என்பதும் இந்த ஊரடங்கின்போது, காலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டும் மளிகை கடைகள், காய்கறி கடைகள், பழக்கடைகள் உள்ளிட்ட ஒரு சில கடைகள் மட்டும் திறந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது கடைகள் திறக்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் 12 மணி வரை என்று முன்பு அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை முதல் டீக்கடைகள் இயங்க அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காய்கறி கடைகள், மளிகை கடைகள், இறைச்சி கடைகள் உள்ளிட்ட அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஊரடங்கின் தளர்வுகளை பொது மக்கள் தவறாக பயன்படுத்தியதாகவும், தேவை இல்லாமல் பொதுமக்கள் வெளியே வருவதால் ஊரடங்கின் நோக்கமே நிறைவேறாமல் இருப்பதாலும் இந்த கூடுதல் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு.
— TNCoronaUpdates (@Covid19TNUpdate) May 14, 2021
நாளை முதல் டீக்கடைகள் இயங்க அனுமதி இல்லை
காய்கறி, மளிகை கடைகள் இனி காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும் - தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு#TNLockdown pic.twitter.com/M5XSXaAIrh