ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள்: எந்தெந்த கடைகள் திறக்கலாம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் நேற்று முதல் 14 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு காலத்தில் காலை 6 மணி முதல் 12 மணிவரை மளிகை, பால், காய்கறி கடைகள் மட்டும் திறக்கலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது வணிகர்களின் கோரிக்கையை பரிந்துரை செய்த தமிழக அரசு மேலும் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அந்த தளவுகள் குறித்த விபரங்கள் பின்வருமாறு
* காய்கறி, மலர்கள் ஆகியவற்றை விற்பனை செய்ய அளிக்கப்பட்ட அனுமதியைப் போன்று, அதே நிபந்தனைகளுடன் பழ வியாபாரமும் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்படுகிறது.
* அனைத்துத் தொழில் நிறுவனங்களும் ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகளில் பிற பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு ஒரு நாள் மட்டும் குறைந்த அளவிலான பணியாளர்களுடன் மேற்கொள்ள அனுமதி
வழங்கப்படுகிறது.
* இந்த ஊரடங்கு காலத்தில் செயல்பட அனுமதிக்கப்பட்ட தொடர் உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இயங்குவதில் ஏற்படும் சிக்கல்களுக்கு உதவும் வகையில் ஒரு “சேவைமையம் 24 மணிநேரமும் செயல்படும் வகையில்அமைக்கப்படும். சென்னையிலுள்ள தொழில் வழிகாட்டி மைய அலுவலகத்தில் இந்த சேவை மையம் இயங்கும். இதற்கான தொலைபேசி எண்கள் 96771-07722, 99943-39191, 78239-28262, 96291-22906, 99629-93496, 99629-93497.
* ஆங்கில மருந்துக் கடைகள் இயங்க அளிக்கப்பட்ட அனுமதியைப் போன்று அதே நிபந்தனைகளுடன், நாட்டு மருந்துக் கடைகளும் இயங்கலாம் என்று அறிவிக்கப்படுகிறது..
மேற்கண்ட தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#கோவிட்19 பொது முடக்கத்திலிருந்து, அத்தியாவசியமான சில வணிகம் மற்றும் துறைகளுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.#TNLockdown pic.twitter.com/cmK23odzch
— TNCoronaUpdates (@Covid19TNUpdate) May 11, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments