ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள்: எந்தெந்த கடைகள் திறக்கலாம்?

  • IndiaGlitz, [Tuesday,May 11 2021]

தமிழகத்தில் நேற்று முதல் 14 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு காலத்தில் காலை 6 மணி முதல் 12 மணிவரை மளிகை, பால், காய்கறி கடைகள் மட்டும் திறக்கலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது வணிகர்களின் கோரிக்கையை பரிந்துரை செய்த தமிழக அரசு மேலும் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அந்த தளவுகள் குறித்த விபரங்கள் பின்வருமாறு

* காய்கறி, மலர்கள்‌ ஆகியவற்றை விற்பனை செய்ய அளிக்கப்பட்ட அனுமதியைப்‌ போன்று, அதே நிபந்தனைகளுடன்‌ பழ வியாபாரமும்‌ மேற்கொள்ளலாம்‌ என்று அறிவிக்கப்படுகிறது.

* அனைத்துத்‌ தொழில்‌ நிறுவனங்களும் ஊரடங்கு காலத்தில்‌ தொழிற்சாலைகளில்‌ பிற பராமரிப்புப்‌ பணிகளை மேற்கொள்வதற்கு ஒரு நாள்‌ மட்டும்‌ குறைந்த அளவிலான பணியாளர்களுடன்‌ மேற்கொள்ள அனுமதி
வழங்கப்படுகிறது.

* இந்த ஊரடங்கு காலத்தில்‌ செயல்பட அனுமதிக்கப்பட்ட தொடர்‌ உற்பத்தி தொழிற்சாலைகள்‌ மற்றும்‌ அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும்‌ தொழிற்சாலைகள் இயங்குவதில்‌ ஏற்படும்‌ சிக்கல்களுக்கு உதவும்‌ வகையில்‌ ஒரு “சேவைமையம் 24 மணிநேரமும்‌ செயல்படும்‌ வகையில்‌அமைக்கப்படும்‌. சென்னையிலுள்ள தொழில்‌ வழிகாட்டி மைய அலுவலகத்தில்‌ இந்த சேவை மையம்‌ இயங்கும்‌. இதற்கான தொலைபேசி எண்கள்‌ 96771-07722, 99943-39191, 78239-28262, 96291-22906, 99629-93496, 99629-93497.

* ஆங்கில மருந்துக்‌ கடைகள்‌ இயங்க அளிக்கப்பட்ட அனுமதியைப்‌ போன்று அதே நிபந்தனைகளுடன்‌, நாட்டு மருந்துக்‌ கடைகளும்‌ இயங்கலாம்‌ என்று அறிவிக்கப்படுகிறது..

மேற்கண்ட தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் காலமானார்: அதிர்ச்சியில் திரையுலகம்!

தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் ஒருவர் காலமானதை அடுத்து திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது 

சபாநாயகர் பதவிக்கு என்னென்ன அதிகாரங்கள் உள்ளது..?

கடந்த 1980-ஆம் ஆண்டு முதல்  உயர்ந்த அதிகாரம் கொண்ட பதவியாகவே சபாநாயகர் பதவி இருந்து வருகிறது. சபாநாயகராக பதவியேற்பவருக்கு என்னென்ன அதிகாரங்கள்  உள்ளது என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

தென்கிழக்கு அரபிக்கடலில் புயல்… தமிழகத்திற்கும் பாதிப்பா?

வரும் மே 16 ஆம் தேதி தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது

கொரோனா பாதித்ததால் வீட்டை பூட்டிய முதலாளி… இளம்பெண் குழந்தையோடு டாக்ஸியில் தங்கிய அவலம்!

இமாச்சலப் பிரதேசத்தில் ஒரு இளம்பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

தவறு செய்தவர்கள் திருந்துவார்கள் என்று காத்திருக்க மாட்டேன்: கமல்ஹாசன் அறிக்கை

தவறிழைத்தவர்கள் தாமே திருந்துவார்கள் என்று காத்திருக்க மாட்டேன் என்றும் தவறிழைத்தவர்களை திருத்தம் கடமையும் உரிமையும் உள்ள தலைவன் நான் என்றும் கமலஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்