மணி கணக்காக கேம் விளையாடும் நபரா? உங்களை பாதிக்கும் 5 மோசமான விஷயங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஸ்மார்ட் போன்களின் வரவிற்கு பிறகு செல்போன் பயன்படுத்தும் நேரம் அதிகரித்து விட்டது என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால் கொரோனா பாதிப்புக்கு பிறகு இந்த செல்போனை சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் எனப் பலரும் வயது வித்தியாசம் இல்லாமல் மணிக்கணக்காக பயன்படுத்தி வருவதை பல ஆய்வுகள் சுட்டிக்காட்டி இருக்கின்றன.
இந்நிலையில் செல்போன் பயன்பாட்டினால் ஏற்படும் நன்மை, தீமை குறித்து வெளிவந்த ஆய்வு ஒன்று மணிக்கணக்காக செல்போனில் கேம் விளையாடினால் மோசமான 5 முக்கிய பாதிப்புகளை சந்திக்க வேண்டிவரும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.
ஆஸ்தெனோபியா– செல்போனை வெறுமனே சிறுவர்களும் இளைஞர்களும் அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு முன்பு வரை கூறப்பட்டது. ஆனால் இன்றைக்கு பள்ளி, கல்லூரி முதற்கொண்டு ஐடி தொழில், வணிகம் என்று எந்த துறையாக இருந்தாலும் செல்போன் அல்லது கணினி திரையைப் பார்த்துக்கொண்டே வேலை செய்துவது போன்ற பழக்கத்திற்கு வந்து விட்டோம்.
இதனால் செல்போனை கேம் விளையாட்டிற்காக பயன்படுத்தும் நபர்களைவிட பெரும்பாலானோர் தங்களது தொழிலுக்காகவும் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தொழில் துறையில் ஈடுபட்டுவரும் சிலர் தொடர்ந்து 12 மணி நேரம் ஸ்மார்ட் திரைகளைப் பார்ப்பதாகக் கூறப்படுகிறது.
இப்படி தொடர்ந்து 12 மணிநேரம் வேலைக்காக கணினியை பார்த்துவிட்டு பிறகு ஓய்வு நேரத்திற்காகவோ அல்லது பொழுது போக்கிற்காகவோ செல்போனில் கேம் விளையாடினால் என்னவாகும்? இந்தத் தவறைத்தான் தற்போது ஆஸ்தெனோபியா என்று மருத்துவர்கள் சுட்டுகின்றனர்.
அதாவது ஒய்வே இல்லாமல் வேலைக்காகவும் அல்லது ஏதோ ஒரு விளையாட்டிற்காகவும் செல்போனை பார்க்கும்போது இந்த ஆஸ்தெனோபியா குறைபாடு கண்ணில் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதனால் கண்கள் கடுமையாக பாதிக்கிறது என்றும் வேலைக்காக ஏற்கனவே கணினியைப் பயன்படுத்திவிட்டு மேலும் குறிப்பிட்ட விளையாட்டிற்கு நீங்கள் அடிமையாகிவிட்டால் உங்களுக்கு ஓய்வு நேரமே இருக்காது. நீங்கள் ஓய்வு எடுக்கும் நேரத்திலும் இரவு நேரத்திலும் கூட அதை விளையாடிக் கொண்டே இருப்பீர்கள். இதனால் கண்களுக்கு ஓய்வு கொடுக்கவே மாட்டீர்கள். நாளடைவில் இது கண்சோர்வை ஏற்படுத்தும். அசௌகரியத்தை ஏற்படுத்தி தலைவலியை உண்டாக்கும்.
தொடர்ந்து மணிக்கணக்காக பயன்படுத்துபோது பார்வை மங்கி போகும் அபாயமும் இருக்கிறது. இதனால் குறைந்தபட்சம் கண்ணை கூசும் சாதனங்களில் இருந்து ஒதுங்கி விடுவதே நல்லது.
விளையாட்டிற்கு அடிமை – வேலைக்காக செல்போன் அல்லது கணினி பயன்பாட்டை தவிர்க்க முடியாது. ஆனால் செல்போனில் ஏதாவது ஒரு கேமை பதிவிறக்கம் செய்துகொண்டு மணிக்கணக்காக விளையாடும்போது அந்த விளையாட்டிற்கு நீங்கள் அடிமையாகி நாளடைவில் உங்களது ஒட்டுமொத்த நேரத்தையும் அது உறிஞ்சி விடும்.
பாதுகாப்பற்ற ஆஃப் ஸ்டோர்கள் – இன்றைக்கு சிறுவர்கள் முதற்கொண்டு இளைஞர்கள் வரை பலரும் பாதுகாப்பற்ற ஆஃப் ஸ்டோர்களில் கேம்களை பதிவிறக்கம் செய்து வருகின்றனர். இதனால் அதிகாரப்பூர்வத் தளங்களைத் தவிர வேறு ஆஃப் ஸ்டோர்களில் இருந்து நீங்கள் எதையாவது பதிவிறக்கம் செய்யும்போது வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது. சில நேரங்களில் உங்களது தனிப்பட்ட விவரங்களை திருடுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
மனநல குறைபாடு – செல்போனில் கேம் விளையாடுவதால் குறிப்பிட்ட நேரத்தில் உங்களது கஷ்டங்களை விலக்கி மனதிற்கு ஒரு பூஸ்டர் கொடுத்ததுபோல நீங்கள் உணரலாம். ஆனால் உண்மையில் மணிக்கணக்காக நீங்கள் கேம் விளையாடுவதால் மன நிம்மதியை இழந்து, கவலை ஏற்படுவதை கண்கூடாகப் பார்க்க முடியும். மேலும் உடல் பருமன், தூக்கக் கோளாறு, இறுதியில் மன அழுத்தம் வரை பல்வேறு பாதிப்புகளை அது ஏற்படுத்தி விடுகிறது.
அன்பை இழத்தல் - செல்போனில் கேம் விளையாடும் பெரும்பாலான நபர்கள் தங்களது அன்புக்கு பாத்திரமானவர்களை விட்டு தள்ளி இருப்பதை பார்க்க முடியும். இதனால் அன்பை மட்டுமல்ல சமூக அனுபவங்களையும் இழந்து விடுகின்றனர். இதுவே நாளடைவில் பிரிவினைக்கும் காரணமாக இருக்கலாம். எனவே உங்களை பாதிக்கும் சாதனங்களில் இருந்து விலகி, உண்மையை நோக்கி பயணம் செய்வது நல்லது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout