கார்த்தியின் அடுத்த படத்தை இயக்கும் வெற்றிப்பட இயக்குனர்?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் கார்த்தி நடித்து முடித்துள்ள 'கைதி' திரைப்படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது அவர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் ஜோதிகா, சத்யராஜூடன், ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து ட்ரீம்வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் 'ரெமோ' பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்தது
இந்த நிலையில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ஜெயம் ரவியின் 'அடங்கமறு' படத்தை இயக்கிய இயக்குனர் கார்த்திக் தங்கவேல், கார்த்தியிடம் ஒரு ஆக்சன் கதையை கூறியுள்ளதாகவும் இந்த கதை அவரை கவர்ந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. கார்த்தியின் 20வது படமாக இந்த படம் அமைய வாய்ப்பு இருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments