close
Choose your channels

ஜெயம் ரவியின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

Thursday, December 14, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி நடிப்பில் சக்தி செளந்திரராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'டிக் டிக் டிக்' திரைப்படம் வெகுவிரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் அவர் அடுத்ததாக ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பான 'சங்கமித்ரா' படத்திற்கு விரைவில் தயாராகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரலில் தொடங்கவுள்ள நிலையில் ஜெயம் ரவியின் இன்னொரு படத்தின் தகவல்கள் சமீபத்தில் வெளிவந்தது

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 'அடங்க மறு' என்பதுதான் அந்த டைட்டில். இன்று அதிகாலை 'அடங்கமறு' டைட்டில் போஸ்டர் வெளிவந்து இணையதளங்களில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை ராஷி கண்ணா நடிக்கவுள்ளார். 'விக்ரம் வேதா' புகழ் சாம் சி.எஸ் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment