'வாத்தி கம்மிங்' பாடலுக்கு பாராட்டு தெரிவித்த சர்வதேச பிரபலம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகிய திரைப்படம் ’மாஸ்டர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. கடந்த ஏப்ரல் மாதமே இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டே உள்ளது. அனேகமாக இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆகியுள்ளது என்பதும், குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற ’வாத்தி கம்மிங்’ என்ற பாடல் தமிழகத்தில், இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் பிரபலமானது என்பது குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் சர்வதேச பிரபலமான ஆடம் மோர்லே (Adam Morley)அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இவர் உலக அளவில் சாதனை நிகழ்த்தும் பிரபலங்களுக்கு விருதுகள் வழங்கும் IARA விருதுகள் வழங்கும் நிறுவனத்தின் அம்பாசிடராக உள்ளார் பது குறிப்பிடத்தக்கது
வாத்தி கம்மிங் பாடலுக்கு சர்வதேச பிரபலம் ஒருவர் பாராட்டு தெரிவித்துள்ளதை அடுத்து விஜய் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்
Love it #VaathiComing great work @actorvijay
— Adam Morley (@Adammorley7) August 6, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com