புல்லால்குழல் இசையில் ரசிகர்களை மயக்கும் இளம் நடிகை… வேறலெவல் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் நடிகர் பிரபுதேவா, நிக்கி கல்ராணி நடிப்பில் கடந்த 2019 இல் வெளியான திரைப்படம் “சார்லி சாப்ளின்2“. இந்தப் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தவர் அதா சர்மா. பாலிவுட் நடிகையான இவர் தற்போது புல்லாங்குழல் வாசிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாலிவுட்டில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான “1920“ எனும் த்ரில்லர் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர்தான் அதா சர்மா. அதைத் தொடர்ந்து கடந்த 2014 இல் “ஹசீ தோ பசீ“ எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் தெலுங்கில் “ஹார்ட் அட்டாக்“, “சன் ஆஃப் சத்தியமூர்த்தி“, “சுப்பிரமணியம் ஃபார் சேல்“, “கரம்“, “சனம்“ போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். கூடவே கன்னடத் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த அவர் தமிழில் “சார்லி சாப்ளின்2“ திரைப்படத்தில் மாணவியாக நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை அதா சர்மா நடிப்பை தவிர இசையிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் நடிகர் ஷாருக் மற்றும் கஜோல் நடிப்பில் வெளியாகி பட்டையைக் கிளப்பிய Tujhe Dekha Toh பாடலை அவர் வாசித்து இருக்கும் வீடியோ சோஷியல் மீடியாவில் கவனம் பெற்றுவருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com