ரூ.30 ஆயிரம் கோடிக்கு பட்டேல் சிலை விற்பனையா? ஆன்லைன் விளம்பரத்தால் பரபரப்பு!
- IndiaGlitz, [Monday,April 06 2020]
உலகின் மிகப்பெரிய சிலையான சர்தார் வல்லபாய் படேலை சிலையை கடந்த 2018ஆம் ஆண்டு பிரதமர் மோடி அவர்கள் குஜராத் மாநிலத்தில் திறந்து வைத்தார் என்பது தெரிந்ததே. 182 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிலையை பார்க்க தினமும் இந்தியாவில் இருந்தும் வெளிநாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியா தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக தொழிலதிபர்கள் உள்பட பலர் கோடிக் கணக்கில், லட்சக்கணக்கில் நிதியுதவி செய்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கை செலவுக்காக ரூபாய் 30,000 கோடிக்கு சர்தார் வல்லபாய் படேல் சிலை விற்பனை செய்ய உள்ளதாக ஆன்லைனில் ஒரு விளம்பரம் வந்துள்ளதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்
இது குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஆன்லைனில் விளம்பரம் கொடுத்த மர்ம நபரை தேடி வருகின்றனர். இதுகுறித்த முதல்கட்ட விசாரணையில் மர்ம நபர் ஒருவர் ஆன்லைனில் மோசடியான விளம்பரத்தை அளித்துள்ளதாகவும், இதனை அடுத்து அந்த நபரை குஜராத் மாநில கிரைம் பிராஞ்ச் போலீசார் தேடி வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது. உலகின் மிகப் பெரிய சிலையான வல்லபாய் படேல் சிலை விற்பனைக்கு என ஆன்லைனில் வெளிவந்துள்ள விளம்பரத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது