பழைய மிரட்டலுடன் மீண்டும் கேப்டன் விஜயகாந்த்: பார்த்திபன் தகவல்

  • IndiaGlitz, [Wednesday,August 29 2018]

முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இருக்கும்போதே அரசியல் கட்சி தொடங்கி நல்ல வாக்கு சதவிகிதத்தை பெற்றவர் கேப்டன் விஜயகாந்த். அதன்பின்னர் அவர் எடுத்த ஒருசில முடிவுகள் தவறாக இருந்ததால் அவருடைய கட்சி பின்னடைவில் இருந்தது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நலமின்றி இருந்த விஜயகாந்த் தற்போது சிகிச்சைக்கு பின் மீண்டும் புத்துணர்ச்சி பெற்றுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடிய விஜயகாந்த் மீண்டும் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டி என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த நிலையில் கேப்டன் விஜயகாந்தை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து கூறிய நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் இந்த சந்திப்பு குறித்து தனது சமூக வலைத்தளத்தில் ஒரு கவிதையை பதிவு செய்துள்ளார். அந்த கவிதை இதோ:

முன்தினம் தளபதி
நேற்று நம்மவர்
இன்று கேப்டன் !

அழகு மெழுகு விளக்கை
பிறந்த நாள் பரிசாக
அளித்து சந்தித்தேன்.

மனதில் பாரமும்
இமையில் ஈரமும்
கண்டவர் நாலே
மாதத்தில் பழைய மிரட்டலுடன்
காணப்போகிறீர்கள் என
நம்பிக்கை அளித்தார்!

 

More News

நடிகர்களின் கட்சிகளில் தவறாமல் இடம் பிடிக்கும் 'மக்கள்'

திரையுலகில் மார்க்கெட் குறையும் நடிகர்கள் அடுத்ததாக அரசியலில் இறங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். குறிப்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் நடிகர்களுக்கு அரசியல் ஆசை அதிகரித்துள்ளது.

சிவகார்த்திகேயனின் 'சீமராஜா: சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்

சிவகார்த்திகேயன் நடித்த 'சீமராஜா' திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கும் நிலையில் இந்த படம் இன்று சென்சாருக்கு சென்றது.

நடிகையின் கள்ளக்காதலனை கூலிப்படை வைத்து கொலை செய்த தந்தை

சூர்யா, ஜோதிகா நடித்த 'மாயாவி' உள்பட பல திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்த விஷ்ணுப்ரியாவின் தந்தை, மகளின் கள்ளக்காதலால் ஆத்திரமடைந்து கூலிப்படை வைத்து கொலை செய்த

விஷாலின் அரசியல் அமைப்பின் பெயர் அறிவிப்பு

நடிகர் விஷால் இன்று நடைபெறும் 'இரும்புத்திரை' படத்தின் 100வது நாள் விழாவில் தனது ரசிகர் மன்றங்களை அரசியல் அமைப்பாக மாற்றி புதிய கொடியை அறிமுகம் செய்யவுள்ளார்

இன்று முதல் உதயமாகும் பிரபல நடிகரின் அரசியல் கட்சி?

கோலிவுட் திரையுலகில் இருந்து எம்.ஜி.ஆர்., சிவாஜி முதல் கமல், ரஜினி வரை பலர் அரசியல்வாதிகளாக மாறியுள்ளனர். கடந்த அரை நூற்றாண்டாக தமிழகத்தை திரையுலகை சேர்ந்தவர்களே ஆட்சி செய்து வந்துள்ளனர்.