மதுவுக்கு விளம்பரம் செய்யும் பிரபல நடிகைகள்: 'பீஸ்ட்' நடிகையுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் நாயகி உள்பட பல நடிகைகள் தற்போது மதுவுக்கு விளம்பரம் செய்து வருவதை நெட்டிசன்கள் கண்டித்து வருகின்றனர்.
இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கில் ஃபாலோயர்கள் வைத்து இருக்கும் நடிகைகள் சிலர் விளம்பரங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் அதனால் அவர்களுக்கு இலட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் வருமானம் கிடைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இதுவரை அழகு சாதனப் பொருள்கள், உணவுப் பொருள்கள் உள்ளிட்ட ஒருசில பொருட்களுக்கு மட்டுமே நடிகைகள் விளம்பரம் செய்த நிலையில் தற்போது மது வகைகளையும் விளம்பரம் செய்ய ஆரம்பித்துவிட்டது நெட்டிசன்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் ‘பீஸ்ட்’ நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஸ்கி விளம்பரத்தை வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கவர்ச்சி நடிகை ராய் லட்சுமி, நடிகை ஹன்சிகா மோத்வானி உள்பட ஒரு சில நடிகைகள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் மதுவுக்கு விளம்பரம் செய்துள்ளனர். அதேபோல் சமீபத்தில் திருமணமான நடிகை காஜல் அகர்வால் தனது கணவருடன் மது விளம்பரத்தில் ஈடுபட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
பிரபல நடிகைகள் மதுவுக்கு விளம்பரம் செய்வதால் இளைஞர்கள் பலர் குடிப்பழக்கத்திற்கு ஆளாகும் நிலை ஏற்படும் என்று ரசிகர்களும் நெட்டிசன்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். பணம் வருகிறது என்பதற்காக எதற்கு வேண்டுமானாலும் விளம்பரம் செய்வதா? என்ற என்று சமூக ஆர்வலர்களும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com