பழைய ஃபார்முக்கு திரும்பிய யாஷிகா… அரபிக்குத்துப் பாடலுக்கு ஆடிய வேறலெவல் வீடியோ!

தமிழ் சினிமாவில் ஒருசில திரைப்படங்களில் மட்டுமே நடித்து ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றவர் நடிகை யாஷிகா. சமீபத்தில் கார் விபத்தில் சிக்கிய இவர் அதிலிருந்து மீண்டு தற்போது பழைய உற்சாகத்துடன் வலம்வருகிறார். அந்த வகையில் அரபிக் குத்து பாடலுக்கு இவர் ஆடிய டான்ஸ் வீடியோ இணையத்தில் பட்டையைக் கிளப்பி இருக்கிறது.

முதலில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் நடிகை யாஷிகா. பின்பு “துருவங்கள் பதினாறு“, “இருட்டு அறையில் முரட்டு குத்து“ போன்ற ஒருசில திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் பிக்பாஸ் 2 சீசன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாகியது. இதையடுத்து பல சினிமாக்களில் ஒப்பந்தமாகியிருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற கார் விபத்து நடிகை யாஷிகாவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் தனது பழைய நிலைமைக்கு திரும்பி வருகிறார். மேலும் பழையபடி வொர்க் அவுட், மாடலிங் போட்டோ ஷுட் என்று சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவாகச் செயல்பட்டு வருகிறார்.

அந்த வகையில் தளபதி விஜய் பாடலான “அரபிக்குத்து“ பாடலுக்கு நடனம் ஆடிய நடிகை யாஷியா பழைய எனர்ஜியோடு கிளாமராக வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

 

More News

எச்.வினோத் வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த அஜித்: என்ன கிஃப்ட் கொடுத்தார்?

'வலிமை' திரைப்படத்தின் இயக்குனர் வினோத் வீட்டிற்கு நடிகர் அஜித் சர்ப்ரைஸ் விசிட் அடுத்ததாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சிவாஜி, கமல், ரஜினியை அடுத்து நடிகர் சரத்குமார் செய்த சாதனை!

நடிகர் திலகம், சிவாஜி கணேசன், உலகநாயகன் கமலஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை அடுத்து நடிகர் சரத்குமார் செய்த சாதனை தற்போது வெளிவந்துள்ளது. 

ஜீவா-சிவா இணைந்து நடித்த படத்தின் புதிய அப்டேட்!

தமிழ் சினிமாவின் ஹீரோக்களான ஜீவா மற்றும் சிவா இணைந்து நடித்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட் வெளிவந்துள்ளது.

சமந்தாவை அடுத்து பனிச்சறுக்கு விளையாட்டில் தமிழ் நடிகை: வைரல் வீடியோ

பிரபல நடிகை சமந்தா கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டு இருந்தார் என்பதும் இது குறித்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து இருந்த

சிலசமயம் உலகை தலைகீழாக பார்ப்பது நன்று: வரலட்சுமியின் வைரல் வீடியோ

சில சமயம் இந்த உலகை தலைகீழாக பார்ப்பது நல்லது என்ற கேப்ஷனுடன் நடிகை வரலட்சுமி சரத்குமார் வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.