close
Choose your channels

ஒட்டகத்துடன் ரொமான்ஸ் செய்யும் நடிகை யாஷிகா ஆனந்த்… வைரல் வீடியோ!

Friday, March 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழில் “துருவங்கள் 16“, “இருட்டு அறையில் முரட்டு குத்து“, “நோட்டா“, “ஜாம்பி“ போன்ற படங்களில் நடித்து இருந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் அடுத்து நடிக்கும் சல்பர் திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் ரிலீசாகி இருந்தது. அதில் நடிகை யாஷிகா போலீஸ் கெட்டப்பில் வந்து ரசிகர்களை மிரட்டி இருந்தார்.

இந்நிலையில் நடிகை யாஷிகா தன்னுடைய இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை பதிவிட்டு உள்ளார். அந்த வீடியோ அரபு எமிரேட்ஸ்ஸில் உள்ள துபாய் நகரில் செயல்பட்டு வரும் ஒரு விலங்கு நல பூங்காவில் எடுக்கப்பட்டு இருக்கிறது. அந்த பூங்காவில் உள்ள விலங்குகளோடு நடிகை யாஷிகா கொஞ்சி விளையாடுகிறார். அதிலும் ஒரு ஒட்டகத்திற்கு ஒரு சிறுதுண்டு இலையை தன்னுடைய வாயில் வைத்து கொடுக்கிறார். ஒட்டகமும் அவரிடம் இருந்து அதைப் பிடுங்கி சாப்பிடுகிறது. பார்ப்பதற்கு இந்தக் காட்சி ரொமான்ஸ் செய்யும் காதலர்களை போலவே இருக்கிறது.

இப்படி விலங்குகளோடு கொஞ்சி விளையாடும் நடிகை யாஷிகாவின் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி வருகிறது. இந்நிலையில் நடிகை யாஷிகா “ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது“, “இவன் தான் உத்தமன்“, “ராஜபீமா“ என அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும் எஸ்.ஜே.சூர்யாவுடன் ஒரு படமும் அதோடு “சல்பர்“ படமும் நடிகை யாஷிகாவிற்கு முக்கிய திருப்புமுனையாக அமையும் எனக் கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment