சைக்கிளிங் சென்ற முதல்வருடன் செல்பி எடுத்த பிக்பாஸ் நடிகை: வைரல் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நேற்று சைக்கிளிங் சென்றார் என்பதும் அது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆனது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் அவருடன் நடிகையும் பிக்பாஸ் போட்டியாளருமான யாஷிகா செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது
சமீபத்தில் தமிழக முதல்வராக பதவியேற்ற முக ஸ்டாலின் அவர்கள் முதல் முதலாக நேற்று ஓஎம்ஆர் சாலையில் சைக்கிளிங் சென்றார். அப்போது சாலையில் சென்றவர்கள் முதல்வர் சைக்கிளில் செல்வதை பார்த்து ஆச்சரியமடைந்தனர். ஒரு சிலர் அவருடன் இணைந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சைக்கிளிங் சென்ற முதல்வரை சந்தித்த நடிகை யாஷிகா ஆனந்த் முதல்வருடன் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
நடிகை யாஷிகா தற்போது ’இவன்தான் உத்தமன்’ ’ராஜபீமா’ ’கடமையை செய்’ ’பாம்பாட்டம்’ ’சல்பர்’ என ஐந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Selfie with our honourable CM @mkstalin ???? pic.twitter.com/E3kbnxGH6S
— Yashika Aannand (@iamyashikaanand) July 4, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments