close
Choose your channels

'கங்குவா' படத்தை மிஸ் செய்த பிரபல நடிகை.. 'சூர்யா 45'ல் இணைவதாக தகவல்..!

Thursday, October 24, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிக்க இருக்கும் 45வது திரைப்படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கும் நிலையில், இந்த படத்தின் நாயகியாக நடிக்க பிரபல நடிகை ஒருவர் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும், இவர் ஏற்கனவே சூர்யா ஜோடியாக ’கங்குவா’ படத்தில் நடிகை இருந்த நிலையில், ஒரு சில காரணங்களால் அந்த படத்தை மிஸ் செய்த நிலையில், தற்போது ’சூர்யா 45’ படத்தில் அவர் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Q!சூர்யா நடிப்பில் உருவாகிய ’கங்குவா’ திரைப்படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி வெளியிடப்படும் நிலையில், அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும், அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது தொழில்நுட்ப பணிகள் தொடங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சூர்யாவின் 45வது திரைப்படம் குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த படத்தில் மூன்று நாயகிகள் நடிக்க இருப்பதாகவும், அவர்கள் காஷ்மீரா பரதேசி மற்றும் ருக்மணி வசந்த் ஆகிய இருவரும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது மட்டும் இன்றி, இந்த படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் ’சீதாராமம்’ படத்தில் நடித்த மிருணாள் தாக்கூர் நடிக்க இருப்பதாகவும், இவர்தான் இந்த படத்தின் மெயின் ஹீரோயின் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment