நடிகர் சங்கத்தில் இருந்து திடீரென நீக்கப்பட்ட 250 படங்களுக்கும் மேல் நடித்த நடிகை.. என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ், தெலுங்கு மொழிகளில் சுமார் 250க்கும் அதிகமான படங்களில் நடித்த நடிகை திடீரென நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் பிரபல தெலுங்கு நடிகை ஹேமா போதை விருந்தில் கலந்து கொண்டதாக குற்றம் காட்டப்பட்ட நிலையில் போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து வந்தனர். இந்த விசாரணையில் நடிகை ஹேமா போதை விருந்தில் கலந்து கொண்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் போதை விவகாரத்தில் சிக்கியதால் நடிகை ஹேமா, தெலுங்கு நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார். இது குறித்து தெலுங்கு நடிகர் சங்க தலைவர் மனோஜ் மஞ்சு கூறிய போது ’ஹேமா போதை விருந்தில் கலந்து கொண்டதை அடுத்து நடிகர் சங்கத்திலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு உள்ளதாகவும், அவர் நிரபராதி என்று ஒருவேளை தெரிய வந்தால் அதன் பிறகு மீண்டும் அவரை சங்கத்தில் சேர்த்து கொள்வது குறித்து ஆலோசனை செய்வோம்’ என்றும் தெரிவித்துள்ளார்.
நடிகை ஹேமா 250க்கும் அதிகமான தெலுங்கு படங்களிலும், ’ஈரமான ரோஜாவே’ ’அழகிய தமிழ் மகன்’ ’சத்யம்’ ’சாகசம்’ ’தேவி’ உள்பட சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com