என்னை ஆன்ட்டி என்று யாராவது சொன்னால் போலீஸில் புகார் செய்வேன்: பிரபல நடிகை எச்சரிக்கை
Send us your feedback to audioarticles@vaarta.com
37 வயதாகும் பிரபல நடிகை ஒருவரை ரசிகர்கள் ஆன்ட்டி என்று கூறி சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வரும் நிலையிலும் தன்னை ஆன்ட்டி என்று யாராவது அழைத்தால் அவர்கள் மீது போலீசில் புகார் செய்வேன் என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொலைக்காட்சியில் தொகுப்பாளனியாக அறிமுகமாகி அதன் பின் நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை அனுசுயா. இவர் அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ என்ற படத்தில் வில்லியாக நடித்த நிலையில் அந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் தற்போது நடித்து வருகிறார்.
இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் சமீபத்தில் வெளியான ’லைகர்’ திரைப்படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருவதை அடுத்து தனது பங்குக்கு நடிகை அனுசுயா அந்த படத்தை விமர்சனம் செய்தார். இதனால் விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் அவரை திட்டியதோடு அவரை ஆன்ட்டி என்றும் அழைத்து கிண்டல் செய்து வருகின்றனர்.
தன்னை ஆன்ட்டி என்று விமர்சனம் செய்பவர்களுக்கு பதிலடி கொடுத்து வந்த அனுசுயா ஒரு கட்டத்தில் கோபமாகி தன்னை ஆன்ட்டி என்று விமர்சிப்பவர்கள் மீது போலீஸில் புகார் கொடுப்பேன் என்று எச்சரிக்கை செய்துள்ளார். மேலும் தனக்கு 37 வயது தான் ஆகிறது என்றும் 25 வயதுக்கு மேல் உள்ளவர்கள் எல்லாம் எப்படி என்னை ஆன்ட்டி என்று அழைக்கலாம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இருப்பினும் தொடர்ச்சியாக இன்னும் அவரை ஆன்ட்டி என்று விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com