தற்கொலை செய்து கொண்ட விஜே சித்ராவின் கடைசி வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ உள்பட பல தொலைக்காட்சி சீரியலில் நடித்த விஜே சித்ரா திடீரென இன்று அதிகாலை தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்ன திரையுலகினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
இந்த நிலையில் நேற்று இரவு வரை சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் படப்பிடிப்பில் விஜே சித்ரா இருந்ததாகவும் அதன் பின்னர்தான் அவர் நாசரேத்பேட்டையில் உள்ள ஓட்டலில் தங்கியதாகவும் அவருடன் அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பவரும் தங்கியதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் படப்பிடிப்பில் இருந்து ஹோட்டல் அறைக்கு வந்த சித்ரா, குளித்துவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றவர் திடீரென சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது
இந்த நிலையில் நேற்று இரவு படப்பிடிப்பின் போது விஜே சித்ரா எடுத்த வீடியோ ஒன்று அவருடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் பக்கத்தில் பதிவாகியுள்ளது. ஒரு சில நொடிகள் மட்டுமே உள்ள இந்த வீடியோ தான் அவர் எடுத்த கடைசி வீடியோ என்று கூறப்படுகிறது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது
#RIPChitra ??☹️ ##PandianStores #chithuvj pic.twitter.com/A7UxPx5x39
— JD (@mastervijay2020) December 9, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com