16 வயசுல எல்லாத்தையும் பாத்துட்டேன்: பிரபல நடிகையின் பரபரப்பு பேட்டி
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவின் குணச்சித்திர மற்றும் கவர்ச்சி நடிகையாக கடந்த 90ஆம் ஆண்டுகளில் வலம் வந்தவர் நடிகை விசித்ரா. கடந்த 1992ஆம் ஆண்டு வெளிவந்த ‘தலைவாசல்’ திரைப்படத்தில் இவர் நடித்த ’மடிப்பு ஹம்சா’ என்ற கேரக்டர் 90களின் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. கமல்ஹாசனின் தேவர் மகன், ரஜினியின் முத்து உள்பட பல திரைப்படங்களில் நடித்த இவர் தற்போது முழுக்க முழுக்க சினிமாவை விட்டுவிட்டு ஆன்மீக பாதையில் இறங்கி விட்டார்.
இந்த நிலையில் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், ‘தான் 16 வயதில் சினிமாவுக்கு அறிமுகமானதாகவும் தனது ஆரம்ப கட்ட சினிமா பயணம் மிகவும் கஷ்டமாக இருந்ததாகவும் 16 வயதில் பார்க்க வேண்டிய அனைத்து கஷ்டங்களையும் தான் சந்தித்ததாகவும் கூறியுள்ளார்.
தன்னுடைய படங்கள் சரியாக ரிலீசாகாமல் இருந்தது, ரிலீஸ் ஆனாலும் தான் கண்டுகொள்ளப்படாமல் இருந்து ஆகியவை காரணமாக தான் சோர்வுடன் இருந்தபோது, ‘தலைவாசல்’ என்ற படத்தில் தான் நடித்த ஒரு கேரக்டர் மிகப் பெரிய ஹிட்டானது என்றும், அதேபோல் ‘ஆத்மா’ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதாகவும் அதன் பின்னர் பல படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடும் வாய்ப்புகளே அதிகம் வந்ததாகவும் கூறினார்.
ஒரு கட்டத்தில் நாம் சினிமாவுக்கு எதற்காக வந்தோம்? என்ன செய்து கொண்டிருக்கிறோம்? என்பதை யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் பாடகர் தீபன் சக்கரவர்த்தி மூலமாக அரவிந்தர் அன்னையின் அறிமுகம் கிடைத்ததாகவும் அதன் பிறகுதான் முழுக்க முழுக்க தனது வாழ்க்கை ஆன்மீகத்துக்கு மாறிவிட்டதாகவும் நடிகை விசித்ரா பேட்டியும் கொடுத்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com