அதிமுக அல்லது சீமான் கட்சி கூட்டணிக்கு போங்க.. நெட்டிசன் கருத்துக்கு ம.நீ.ம கட்சியின் நடிகை பதிலடி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
திமுக கூட்டணியில் இருக்கும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு தொகுதி கொடுக்கப்படும் என்றும் அந்த தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுவார் என்றும் கூறப்பட்ட நிலையில் திடீரென ஒரே ஒரு ராஜ்யசபா தொகுதிக்கு மட்டும் ஒப்புக்கொண்டு கமல்ஹாசன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது அவரது கட்சியினருக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இது குறித்து நெட்டிசன் ஒருவர் கமல்ஹாசன் தனது கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை ஏமாற்றி விட்டார் என்றும் அவரது கட்சி தொண்டர்களுக்காக வருத்தப்படுகிறேன் என்று கூறியதோடு வெயிட்டாக பணம் வாங்கிவிட்டு அவர் ஒரே ஒரு ராஜ்யசபா தொகுதிக்காக சீட்டுக்காக தன்னைச் சுற்றி இருந்தவர்களை ஏமாற்றி விட்டதாக தெரிவித்திருந்தார். மேலும் தயவு செய்து அதிமுக அல்லது நாம் தமிழர் கட்சி கூட்டணிக்கு செல்லுங்கள் என்றும் உங்கள் பொன்னான நேரத்தை திமுகவில் வீணாக்காதீர்கள் என்றும் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதில் கூறிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகி ஆன நடிகை வினோதினி ’நாட்டு நலனுக்காக எடுத்த முடிவு இருக்கட்டும், அப்போ வீட்டு நலன்? என்ற கேள்வி எழுப்பியதோடு ’உதயசூரியன்ல குத்துங்கனு என்ன சொல்ல வையுங்க பார்ப்போம், எப்போதும் நாங்கள் மக்கள் நீதி மய்யம் தான்’ என்று தெரிவித்துள்ளார். நடிகை வினோதினியின் இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாட்டுநலனுக்காக எடுத்த முடிவு இருக்கட்டும். அப்போ வீட்டு நலன்? உதயசூரியன்ல குத்துங்கனு என்ன சொல்லவையுங்க பார்ப்போம்.
— Vinodhini Vaidynathan (@VinodhiniUnoffl) March 9, 2024
MNM forever. 🔦@ikamalhaasan
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com