உயிருடன் இருக்கும்போதே கண்ணீர் போஸ்டர்: தமிழ் நடிகையின் கமெண்ட் என்ன தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
உயிருடன் இருக்கும் போதே தனக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியவர்களுக்கு பதிலடி தரும் வகையில் தமிழ் நடிகை ஒருவர் தனது டுவிட்டரில் டுவிட் ஒன்றை பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
நடிகர் ரகுமான் நடித்த ’சங்கமம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை விந்தியா. அதன் பின்னர் சில படங்களில் மட்டுமே நடித்து அவர் அதிமுகவில் இணைந்து அதிமுக பிரச்சார பீரங்கியாக மாறினார். அவரது இடைவிடாத பேச்சுக்கு பெரும் ரசிகர்கள் குவிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் விந்தியாவுக்கு திடீரென கண்ணீர் அஞ்சலி போஸ்டரை மர்ம நபர்கள் சிலர் ஒட்டியுள்ளனர். இது குறித்து தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள விந்தியா கூறியிருப்பதாவது:
உலகத்துலயே தன்னோட கண்ணீர் அஞ்சலி போஸ்டர பாத்து தானே சிரிக்குற பாக்கியம் கிடைச்சவங்கள்ல நானும் ஒருத்தி. ஸ்டாலினுக்கு வருங்கால முதல்வரேனு போஸ்டர் போட்டு அலுத்து போயிட்டாங்க போல. இந்தமாறி போஸ்டர் பார்த்தா ஆயுசு கூடுமாம். ஆண்டவனை தவிர எனக்கு என்ட் கார்டு போட எவனாலயும் முடியாது ராசா.
விந்தியாவின் இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.
உலகத்துலயே தன்னோட கண்ணீர் அஞ்சலி போஸ்டர பாத்து தானே சிரிக்குற பாக்கியம் கிடைச்சவங்கள்ல நானும் ஒருத்தி. ஸ்டாலினுக்கு வருங்கால முதல்வரேனு போஸ்டர் போட்டு அலுத்து போயிட்டாங்க போல. இந்தமாறி போஸ்டர் பார்த்தா ஆயுசு கூடுமாம். ஆண்டவனை தவிர எனக்கு என்ட் கார்டு போட எவனாலயும் முடியாது ராசா. pic.twitter.com/Zsie6obR86
— Vindhyaa (@vindhyaAiadmk) April 27, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments