சட்டையை கழட்டியபடி செம கிளாமர்… நடிகை விமலா ராமனா இது? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் ஒருசில திரைப்படங்களில் மட்டுமே நடித்து ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை நடிகையான விமலா ராமன் சமூகவலைத் தளத்தில் வெளியிட்டுள்ள போட்டோஷுட் புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யத்தை வெளியிட்டு வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பிறந்து வளர்ந்தவரான விமலா ராமன் அங்குள்ள நடனாலயா பள்ளியில் நடனப்பயிற்சி பெற்று சிறந்த பரதநாட்டிய கலைஞர் ஆனார். அதைத் தொடர்ந்து அழகிப்போட்டி மற்றும் மாடலிங் துறையில் கவனம் செலுத்திவந்த இவர் மிஸ் இந்தியா ஆஸ்திரேலியா பட்டத்தையும் தொடர்ந்து மிஸ் இந்தியா ஆஸ்திரேலியா சைபர் குயின் அழகிப் பட்டங்களையும் வென்றார்.
இந்நிலையில் சினிமா மீது ஆர்வம் கொண்ட அவர் தமிழ் சினிமாவில் ‘பொய்’ எனும் திரைப்படத்தில் 2006 இல் அறிமுகமானார். அதேபோல மலையாளத்தில் ‘நேரம்’ எனும் திரைப்படத்தில் அறிமுகமான அவர் தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, ஒருசில ஆங்கில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் மம்முட்டி, மோகன்லால், திலீப் போன்று முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் அவர் நடித்திருக்கிறார்.
அந்த வகையில் இயக்குநர் கே.பி. ஜெகன்நாத் இயக்கத்தில் சேரன் நடிப்பில் உருவாகி 2008 இல் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படமான ‘ராமன் தேடிய சீதை’ திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். அதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ‘இருட்டு’ போன்ற ஒருசில திரைப்படங்களில் மட்டுமே நடித்த அவர் தற்போது தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில் ‘காண்ட்வதாரி அர்ஜுனா‘ போன்ற ஒருசில திரைப்படங்களை மட்டுமே கைவசம் வைத்திருக்கும் நடிகை விமலா ராமன் சோஷியல் மீடியா தளங்களில் படு ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் கோல்டன் நிறத்தில் சட்டை அணிந்திருக்கும் அவர் ஒருபக்கம் சட்டையை கழட்டி விட்டபடி படு கவர்ச்சியாக போட்டோஷுட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் ராமன்தேடிய சீதை திரைப்படத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளைக் கொண்டவரா இவர்? என்று ஆச்சர்யத்தை வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com