கணவர் மற்றும் மகள்களுடன் நடிகை விஜி சந்திரசேகர்.. அபூர்வ புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Monday,February 27 2023]

நடிகை விஜி சந்திரசேகர் தனது கணவர் மற்றும் மகள்களுடன் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி குண சித்திர நடிகைகளில் ஒருவர் விஜி சந்திரசேகர். பிரபல நடிகை சரிதாவின் சகோதிரியான இவர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் உருவான ’தில்லுமுல்லு’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு அவர் ’இந்திரா’ ’பார்த்தாலே பரவசம்’ ’ஆயுத எழுத்து’ ’ஆரோகணம்’ ’மதயானை கூட்டம்’ ’கடைக்குட்டி சிங்கம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணசேத்திர வேடங்களில் நடித்தார்.

திரைப்படங்களில் மட்டுமின்றி பல தொலைக்காட்சி சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார் என்பதும் இவருக்கு என்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் ’கேப்டன் மில்லர்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை விஜி சந்திரசேகர், கேப்டன் சந்திரசேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதிக்கு சுரக்ஷா மற்றும் லவ்லி ஆகிய இரண்டு மகள்கள் உள்ளன. விஜி சந்திரசேகரின் மகள் லவ்லி சமீபத்தில் வெளியான ’அயலி’ என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும் அவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மகள்கள் மற்றும் கணவருடன் விஜி சந்திரசேகர் இருக்கும் சில அபூர்வ புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

More News

பாடகி ஸ்வேதா மேனனின் கணவர், குழந்தையை பார்த்திருக்கிறீர்களா? இதோ வைரல் புகைப்படங்கள்..!

தமிழ் திரை உலகின் பின்னணி பாடகிகளில் ஒருவரான ஸ்வேதா மோகனின் கணவர் மற்றும் குழந்தையின் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

இதுதான் கடைசி.. இனிமேல் வரமாட்டேன்.. 'குக் வித் கோமாளி' மணிமேகலை முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

பிப்ரவரி 26 ஆம் தேதி ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் தனது கடைசி எபிசோடு என்றும் இனிமேல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வரமாட்டேன் என்றும் மணிமேகலை

'லியோ'வில் நடித்த அனுபவம்.. மிஷ்கினின் நெகிழ்ச்சியான தகவல்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடித்து வரும் இயக்குனர் மிஷ்கின் தனது அனுபவங்களை நெகிழ்ச்சியாக

என்னுடைய முதல் முயற்சி.. நடிகை ஷாலு ஷம்முவின் வைரல் வீடியோ..!

தமிழ் திரை உலகின் கவர்ச்சி நடிகை ஷாலு ஷம்மு ஜிம்மில் தான் முதல் முயற்சி எடுத்துள்ளதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. 

படப்பிடிப்பு முடியும் முன்பே இத்தனை கோடி பிசினஸ் ஆகிவிட்டதா 'லியோ'?  முழு விபரங்கள்..!

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் கூட இன்னும் முடிவடையாத நிலையில் இந்த படத்தின் பிசினஸ் சுமார் ரூ.400 கோடி அளவு