ஃபைனலுக்கு வந்துட்டு பேசுவோம்: விஜய், சூர்யா ரசிகருக்கு நடிகையின் பதிலடி!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றை முதல் பிளே ஆஃப் போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தல தோனியின் சி.எஸ்.கே படை தோல்வி அடைந்தது. இதனால் மும்பை அணி நேரடியாக இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றது. சொதப்பலான பேட்டிங் மற்றும் கேட்சுகளை தவறவிட்டதே சிஎஸ்கே அணியின் தோல்விக்கு காரணமாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் விஜய், சூர்யாவின் ரசிகர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில், 'சிஎஸ்கே கிளம்பு கிளம்பு, ஃபைனலுக்கு வந்தாலும் அடிதான் வாங்க போறிங்க' என்று பதிவு செய்துள்ளார்.
இந்த பதிவுக்கு பதிலடி கொடுத்துள்ள நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான விஜயலட்சுமி, 'அடப்பாவி, தமிழ் பேசுற, தளபதி, சூர்யான்னு சொல்ற. நீ மும்பை ரசிகரா? ஃபைனல் வந்துட்டு பேசுவோம் நாங்க. அது வரைக்கும் நீங்க சத்தமா பேசிக்கோங்க' என்று கூறியுள்ளார். விஜயலட்சுமியின் இந்த டுவீட்டுக்கு ஆதரவும் எதிர்ப்புமான கமெண்டுக்கள் பதிவாகி வருகிறது. 'அது என்ன தமிழ்நாடு, தமிழ்நாட்டில் பிறந்தா சென்னைக்கு தான் சப்போர்ட் பண்ணனுமா? மும்பைக்கு சப்போர்ட் பண்ற ஒவ்வொருத்தனும் சச்சின் ஃபேனா இருப்பான்! உங்களுக்கு தோனின்னா எங்களுக்கு சச்சின்' என்று ஒரு டுவிட்டர் பயனாளி கருத்து தெரிவித்துள்ளார்.
Ada Pavi.. Tamizh pesra.. thalapathy surya nu soldra.. MI ya nee.. final vanthuttu pesuvom nanga. Athu varaikum neenga sathama pesikonga https://t.co/eVFaESNdeR
— Vijayalakshmi A (@vgyalakshmi) May 7, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com