ஒரு கோடி பணம் இன்னும் கைக்கு வரல்ல, அதுக்குள் இப்படியா? விஜயலட்சுமி விரக்தி!

சர்வைவர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதற்கான ஒரு கோடி ரூபாய் பரிசு பணம் இன்னும் கைக்கு வரவில்லை என்றும், அதற்குள் தன்னை பற்றி நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்து கொண்டிருப்பதாகவும் நடிகை விஜயலட்சுமி விரக்தியுடன் கூறியுள்ளார்.

ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சி ஜீடிவியில் ஒளிபரப்பாகி வந்தது என்பதும் இந்த ரியாலிட்டி ஷோ பார்வையாளர்களுக்கு வித்தியாசமாக இருந்ததால் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் தங்கள் திறமையை பலர் நிரூபித்து வந்தனர் என்பதும் பலமுறை இந்த போட்டியில் சறுக்கினாலும் கடைசியில் இந்த போட்டியை தனது திறமை மற்றும் புத்திசாலித்தனத்தால் வென்று ரூபாய் ஒரு கோடி பரிசு பணத்தை நடிகை விஜயலட்சுமி வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நிகழ்ச்சி தொடங்கும் போதே பரிசு பணம் கைக்கு வர இரண்டு மாதங்கள் ஆகும் என்று கூறி இருந்தனர் என்றும் அதனால் பரிசுப்பணம் ஒரு கோடி இன்னும் கைக்கு வரவில்லை, அதற்குள் தன்னைப்பற்றி நெகட்டிவ் கமெண்ட்ஸ் சமூக வலைத்தளங்களில் அதிகம் வருவது எனக்கு மிகவும் வருத்தமாக இருப்பதாகவும் விரக்தியுடன் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். மேலும் தன்னைப்பற்றி நெகட்டிவாக விமர்சனம் செய்ய ஒரு சிலர் பணம் கொடுத்து இருக்கிறார்கள் என்றும் அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.