தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட விஜய், சூர்யா பட நடிகை!
- IndiaGlitz, [Saturday,February 23 2019]
விஜய், சூர்யா இணைந்து நடித்த 'ப்ரெண்ட்ஸ்' படத்தில் விஜய்க்கு தங்கையாகவும், சூர்யாவுக்கு ஜோடியாகவும் நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. இவர் தற்போது உடல்நலமின்றி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
இதுகுறித்து நடிகை விஜயலட்சுமியின் சகோதரி கூறியதாவது: விஜயலட்சுமிக்கு நேற்று ரத்த அழுத்தம் அதிகமானதால் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளோம். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருந்த பணத்தை எல்லாம் எங்கள் அம்மாவின் சிகிச்சைக்கே செலவு செய்துவிட்டோம். மிகுந்த பொருளாதார சிக்கலில் உள்ளோம். விஜயலட்சுமியின் சிகிச்சைக்கு சினிமா துறையினர் உதவ வேண்டும்‘ என்று கூறியுள்ளார். இவருடைய கோரிக்கையை நடிகர் சங்கம் பரிசீலிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உதவி இயக்குனர் ஒருவர் விஜயலட்சுமியை திருமணம் செய்ய கட்டாயப்படுத்தியதால் அவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது. அதே ஆண்டில் விஜயலட்சுமியின் தந்தை மரணம், சில ஆண்டுகள் கழித்து தாயாரின் உடல்நலக்குறைவு என அடுத்தடுத்து சோதனைகளை சந்தித்த விஜயலட்சுமியின் குடும்பத்தினர்களுக்கு திரையுலகம் உதவி செய்து கைகொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்